தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 augustus 2013

நவனீதம்பிள்ளை கிளிநொச்சி, முல்லைத்தீவு விஜயம். இன்று இராணுவம் அற்ற பிரதேசமாக காட்சியளித்தது!

ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் மேற்படி இரு மாவட்டங்களிலும் படையினரை எங்கும் காணமுடியாத நிலை இன்று காணப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஏ-35வீதியூடாக அம்மையார் பயணித்திருந்த நிலையில் மேற்படி வீதியில் அமைக்கப்பட்டிருந்த காவலரண்கள் அனைத்தும் இன்று வெறுமையாக காணப்பட்டதுடன் சுதந்திரபுரம் பகுதியில் சூட்டுத் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்திவிட்டு படையினர் மக்கள் மீது தாக்குதல் நடத்திய இடத்திலிருந்த பெருமளவு வாகனங்களை முழுமையாக மறைக்கும் வகையில் உயரமான வேலிகள் போடப்பட்டுள்ளன.
இரட்டைவாய்க்கால் பகுதியிலும் இரணைப்பாலை மாத்தளன் செல்லும் வீதியிலும் கிடந்த யுத்த சாட்கிகள் மற்றும் பெருமளவு வாகனங்கள் ஒரு சில தினங்களுக்குள் முழுமையாக அகற்றப்பட்டதுடன் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம் என்ன பதாகைகளும் அகற்றப்பட்டு இப்பகுதியில் நிறைந்து கிடக்கும் இராணுவம் முழுமையாக இன்று அகற்றப்பட்டிருந்ததுடன் சில காவலரண்களுக்கு பச்சைஇலை தளைகளை வெட்டி வெளியாலே மூடியிருந்தமையினையும் காணக்கூடியதாக இருந்தது.
மேலும் ஆனையிறவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதி சோதனைச்சாவடி முழுமையாக அகற்றப்பட்டிருந்தது.
எனினும் மக்கள் சந்திப்புக்களில் இராணுவத்தினர் சிவில் உடையில் மக்களோடு மக்களாக நின்று மக்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டுவந்த நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றபோது இராணுவம் ஒட்டுக்கேட்கும் விடயம் அம்மையாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அவர் மக்களை தனக்கு மிக அருகில் அழைத்து அவர்களுடைய பிரச்சினைகளை காதோடு காது வைத்தாற்போல் கேட்டறிந்ததுடன் அவ்வாறு பேசும்போது புகைப்படம் எடுப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் இராணுவம் அற்ற பிரதேசம் மிக சுதந்திரமான பிரதேசம் போன்று காட்சியளித்தது.

Geen opmerkingen:

Een reactie posten