[ செவ்வாய்க்கிழமை, 27 ஓகஸ்ட் 2013, 02:34.41 AM GMT ]
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் முயற்சிக்கின்றன.
பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டின் ஒருமைப்பாட்டை நிறுவிய நாட்டுத் தலைவரை காட்டிக் கொடுக்க முயற்சிக்கப்படுகின்றது.
மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கத் துடிக்கும் தரப்பினர், 1988களில் 60000 இளைஞர் யுவதிகளை டயர்களைக் கொண்டு எரித்தனர்.
மக்கள் பலத்தினால் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது என்பதனை ஐக்கிய தேசியக் கட்சி விளங்கிக் கொண்டுள்ளது. இதனால், அமெரிக்காவைக் கொண்டு அரசாங்கத்தை கவிழக்க முயற்சிக்கப்படுகின்றது.
மக்கள் அரசாங்கத்துடன் இருக்கும் வரையில் எந்தவொரு சக்தியினாலும் சதித் திட்டங்கள் தீட்ட முடியாது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மட்டுமன்றி நாட்டின் எந்தப் பகுதியிலாவது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளனவா என்பதனை நவநீதம்பிள்ளை பார்க்க முடியும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRbMVfw3.html#sthash.To8gcMm1.dpuf
நவிபிள்ளை இன்று முள்ளிவாய்க்கால் செல்வதற்கு முன்னதாக, அங்கு திடீர் பயணம் மேற்கொண்ட இராணுவத் தளபதி
[ செவ்வாய்க்கிழமை, 27 ஓகஸ்ட் 2013, 01:48.59 AM GMT ]
இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற பின்னர், லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க முதல் முறையாக நேற்று முல்லைத்தீவுக்குச் சென்றார்.
அவர் முல்லைத்தீவுப் படைத்தலைமையகம், புதுக்குடியிருப்பில் உள்ள 68வது டிவிசன் தலைமையகம், ஒட்டுசுட்டானில் உள்ள 64வது டிவிசன் தலைமையகம், வெலிஓயாவில் உள்ள 59வது டிவிசன் தலைமையகம் ஆகியவற்றுக்குச் சென்று படையினருடன் கலந்துரையாடியதுடன், ஆயிரக்கணக்கான படையினர் மத்தியிலும் உரையாற்றியுள்ளார்.நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு, இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் போரின் தடயங்களை அழிக்கும் முயற்சிகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், போரின் தடயங்களை நவநீதம்பிள்ளையிடம் இருந்து மறைக்கும் நடவடிக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும், படையினர் மத்தியில் இவரது பயணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கிலுமே இராணுவத் தளபதி முல்லைத்தீவுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பயணத்தின் போது, முல்லைத்தீவில் உள்ள படை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய புதிய இராணுவத் தளபதி, இன்று நவநீதம்பிள்ளை செல்லவுள்ள பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள பொதுமக்கள் சிலரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten