தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

நாம் எல்லோரும் ஒரு நாட்டில் சமமான பங்காளிகளாக வாழ்வோம்!- மகிந்த ஹத்துருசிங்க

அரசாங்கம் இராணுவ ஆட்சியை நடத்தி வருகின்றது!– ஐ.தே.க
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 03:27.54 PM GMT ]
அரசாங்கம் இராணுவ ஆட்சியை நடத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்வரும் காலத்தில் பாடசாலைகளும், கல்வி நிறுவனங்களும் இராணுவமயப்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இராணுவத்தின் மீது மக்களுக்கு மரியாதை இருந்தது.
அரசாங்கத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இராணுவம் பயன்படுத்தப்படுகின்றது.
அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புக்களை பூர்த்தி செய்வதற்காக அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அரச தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVgp4.html#sthash.MnL86QYt.dpuf

நாம் எல்லோரும் ஒரு நாட்டில் சமமான பங்காளிகளாக வாழ்வோம்!- மகிந்த ஹத்துருசிங்க
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 04:12.16 PM GMT ]
நாம் எல்லோரும் ஒரு நாட்டில் சமமான பங்காளிகளாக வாழ்வோம் என யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
1995 ஆண்டு விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட போரின் காரணமாக இராணுவ பயன்பாட்டிற்கென பொதுமக்களின் வீடுகள் மற்றும் காணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது எனக் குறிப்பிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க 2009 ஆம் ஆண்டு சமாதானம் ஏற்பட்டதை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பணிப்புக்கு ஏற்ப தற்போது பொதுமக்களின் சொத்துக்களை மீள் அளித்து வருவதாக தெரிவித்தார்.
2009 ம் ஆண்டு இறுதிப் பகுதியில் 26 ஆயிரத்து 400 ஆக காணப்பட்ட இராணுவம் தற்போது யாழ் குடாநாட்டில் 13 ஆயிரத்து 100 இராணுவத்தினர் தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVgp7.html#sthash.QIx23ITS.dpuf

Geen opmerkingen:

Een reactie posten