[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 09:40.10 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆர்ப்பாட்டங்களை நடத்தி எதிர்ப்புகளை வெளியிடுவதில் பெரிய பயன்கள் கிடைக்கப் போவதில்லை.
இதனால் இலங்கைக்கு ஒருவிதத்தில் சாதகமற்ற நிலைமை ஏற்படக் கூடும்.
ஆர்ப்பாட்டங்களை நடத்தி பலத்தை காட்டினாலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மை குறைவானதாகவே இருக்கும்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் என்ற முறையில் நவநீதம்பிள்ளைக்கு இலங்கையில் ஆய்வுகளை மேற்கொள்ள உரிமை உள்ளது என்றார்.
அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையானது பாதமாக அமையலாம் எனவும், அந்த பாதக நிலைமையைச் சீர்செய்ய ஆர்ப்பாட்டங்களை செய்யாது, அதனைப் புத்திசாலித்தனமாக அணுக வேண்டும் என கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்திருந்தார்.
See more at: http://www.tamilwin.net/show-RUmryIRaMVft5.html#sthash.aDRjI7qY.dpuf
பெண்ணொருவர் பாலியல் வல்லுறவு: சிறீதரன் எம்.பி ஊடகத்திற்கு வழங்கி செய்தி குறித்து பொலிஸார் விசாரணை
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 09:51.31 AM GMT ]
கடந்த 13.08.2013 செவ்வாய்கிழமை அன்று பூநகரி விநாசியோடைப் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் தன் வீட்டுக்குப் பின்புறமாகவுள்ள பனங்காட்டில் பனங்குருத்து வெட்டச் சென்ற வேளையில் பச்சை உடை தரித்த இருவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்.
இவர் மாலை 5.00 மணிக்குப் பின் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடும் இரத்தப் போக்குக் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இன்றுவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் வீடு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இச் சம்பவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பி.பீ.சி செய்திச் சேவைக்கு வழங்கிய செய்தி குறித்து சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது குறித்து இன்று பிற்பகல் 12.15 தொடக்கம்1.30 வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்டத் தலைமைச் செயலகமாகிய அறிவகத்தில் உதவிப் பொலிஸ்மா அதிபர் AJYB கிருஷாந்த, கிளிநொச்சி பொலிஸ் தலைமை அதிகாரி CK வீரசிங்க,பொலிஸ் பரிசோதகர் ஆர்றித்தீன் ஆகியோர் விசாரணை நடத்தி பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர்.
ஏலவே இப்பெண் மீதான பலாத்காரம் தொடர்பாக நீதியான விசாரணை தேவை என வலியுறுத்தி கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகருக்கு சி.சிறீதரன் எழுத்து மூலமும் அறிவித்தார்.
ஆனால் இதுவரை சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படவோ விசாரணை செய்யப்படவோ இல்லை. அண்மைய நாட்களாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்களை இராணுவம் அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
See more at: http://www.tamilwin.net/show-RUmryIRaMVft7.html#sthash.nmfnkWyu.dpuf
Geen opmerkingen:
Een reactie posten