[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 07:19.23 AM GMT ]
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது மக்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் திரையிட்ட மற்றுமொரு திரைப்படக் காட்சி.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரும் பொழுது நாட்டில் இருந்து ஜனாதிபதி வெளியேறினார்.
இது பிள்ளையை ஐந்து சதத்திற்கும் ஜனாதிபதி கணக்கில் எடுத்து கொள்ளவில்லை என காட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட ஏமாற்று நடவடிக்கை.
சில திரைப்படங்களில் சண்டியர்கள் , வில்லன் வரும் போது மறைந்திருந்து பிறகு எதிர்கொள்வார்கள். அதனை போவே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையும் அமைந்துள்ளது.
இது பற்றி எதிர்காலத்தில் ஆசிரியர் தலையங்கங்கள், கட்டுரைகள், புதிய இலக்கியங்கள் படைக்கப்படலாம். எனினும் இந்த நடவடிக்கை ராஜதந்திர ரீதியான செயல் அல்ல என்றார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே தாம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRaMVftz.html#sthash.IW6PRX4i.dpufஇது மக்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் திரையிட்ட மற்றுமொரு திரைப்படக் காட்சி.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரும் பொழுது நாட்டில் இருந்து ஜனாதிபதி வெளியேறினார்.
இது பிள்ளையை ஐந்து சதத்திற்கும் ஜனாதிபதி கணக்கில் எடுத்து கொள்ளவில்லை என காட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட ஏமாற்று நடவடிக்கை.
சில திரைப்படங்களில் சண்டியர்கள் , வில்லன் வரும் போது மறைந்திருந்து பிறகு எதிர்கொள்வார்கள். அதனை போவே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையும் அமைந்துள்ளது.
இது பற்றி எதிர்காலத்தில் ஆசிரியர் தலையங்கங்கள், கட்டுரைகள், புதிய இலக்கியங்கள் படைக்கப்படலாம். எனினும் இந்த நடவடிக்கை ராஜதந்திர ரீதியான செயல் அல்ல என்றார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே தாம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இந்தியா திணிக்கும் 13வது சட்டத்திருத்தத்தை எதிர்த்தும் மாகாணசபைத் தேர்தலை புறக்கணிக்க கோரியும் சென்னையில் ஆர்ப்பாட்டம்(இலங்கை தர அன்றும் மறுத்ததை இந்தியா திணித்தது என்று புலிகள் சொன்னார்கள்,அது அரசியல்!இன்று மாணவர் சொல்கிறார்கள்,இது அறியாமையா?)
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 09:11.42 AM GMT ]
ஈழத் தமிழர்கள் ஏற்க மறுத்த 13 வது சட்ட திருத்தத்தையும் அதன் மூலம் வரும் மாகாணத் தேர்தலையும் ஏற்க மாட்டோம் என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
ஈழத் தமிழர்களால் 1987லேயே புறக்கணிக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்த இந்திய அரசு துடிக்கிறது. ஆனால் இது எந்த ஒரு நாளிலும் தமிழர்களுக்கு இறுதியான தீர்வோ அல்லது இடைக்கால தீர்வோ அல்ல. மற்றும் இதன் அடிப்படையில் துப்பாக்கி முனையில் நடக்கவிருக்கும் வடக்கு மாகாணத் தேர்தலின் மூலம் ஈழ தமிழர்களை கட்டாயபடுத்தி இலங்கையின் அரசியல் சாசனத்தை ஏற்றுகொள்ள வைக்கிறார்கள். இதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு தீர்வு தரும் கோரிக்கையான பொதுவாக்கெடுப்பை நிராகரிக்கும் வேலையில் இந்திய-இலங்கை அரசுகள் ஈடுபட்டுள்ளன.
இந்த ஜனநாயாகமற்ற தேர்தலை நடத்தி, தமிழர்கள் இலங்கையில் நலமாக வாழ்வதாகக் காட்டி, கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த சர்வதேச சமூகம், இந்தியாவுடன் சேர்ந்து முனைப்புடன் செயல்படுகிறது.
கொமன்வெல்த் மாநாட்டை நடத்தி பல சர்வதேச முதலீட்டின் மூலம் இனப்படுகொலையை மறைக்கவிருக்கிறார்கள். கொமன்வெல்த் மாநாட்டை நடத்தினால் அடுத்த இரண்டு ஆண்டு கொமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக ராஜக்ச தான் இருப்பார் அதனால் எந்தவிதமான சர்வதேச விசாரணையும் அவர் மீது நடத்த முடியாது. இதனால் ஒட்டுமொத்தமாக தமிழர்களின் கோரிக்கை குழித்தோண்டி புதைப்பதோடு மட்டுமல்ல குறைந்தப்பட்ச விசாரணையின்றி ராஜபக்ச தப்பிக்க இருக்கிறார்.
மாகாண தேர்தல் மூலம் சிங்கள அரசுக்கு சாதகமான கைப்பாவை முதல்வரை கொண்டு தமிழரின் பிரதிநிதி என சர்வதேச சமூகத்தில் ஈழமக்களின் சார்பாக இலங்கைக்கு சாதகமாக பேச வைத்து, இதனால் சர்வதேச அளவில் ஈழ கோரிக்கை நிராகரிக்கபடுவதற்கான சதியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் வெளியுறவு கொள்கையை நியாயப்படுத்தும் நோக்கோடு பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரித்து,நடித்துள்ள இந்தி திரைப்படம் “மெட்ராஸ் கஃபேயை” வண்மையாக கண்டிக்கிறோம்.
தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கோடு, எடுக்கப்பட்ட இப்படத்தை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும், மற்றும் தமிழரை இழிவுபடுத்திய காரணத்தால் ஜான் ஆபிராகாம் தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ஜான் ஆபிரகாம் விளம்பரப்படுத்தும் அனைத்து பொருட்களையும் தமிழர்கள் புறக்கணிப்போம்.
கோரிக்கைகள்:-
1)தனித்தமிழீழ கோரிக்கையை சிதைக்க இந்தியா திணிக்கும் 13வது சட்டத்திருத்தத்தை புறக்கணிக்கின்றோம்.
2) இந்திய-இலங்கை கூட்டுச்சதியால் நடத்தப்படவிருக்கின்ற மாகாணத் தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழீழ மக்களை கோருகிறோம்.
3) தனித்தமிழீழத்திற்கான ஒரே தீர்வான பொதுவாக்கெடுப்பை சர்வதேச சமூகமே உடனே நடத்து.
4) இனப்படுகொலையை மறைக்கும் பொருட்டு இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளின் கூட்டுச்சதியால் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது.
5) காமன்வெல்த்தின் அடிப்படை விதிகளை மீறிய இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
6) இனப்படுகொலை மண்ணில் காமன்வெல்த் மாநாடு நடைப்பெற்றால் இந்தியா காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டும்.
மேற்கண்ட காரணங்களை முன்வைத்து இன்று இந்த கண்டன ஆர்பாட்டத்தை பாலச்சந்தர் மாணவர் இயக்கம் நடத்தியது.
: http://www.tamilwin.net/show-RUmryIRaMVft4.html#sthash.PjyEcycB.dpuf
Geen opmerkingen:
Een reactie posten