தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

சற்றுமுன்னர் காளி கோவில் பக்த்தர்களோடு சிங்களவர்கள் முறுகல் !

இலங்கையில் உள்ள முத்துகாம நகரில் செயின் ஜோர்ஜ் எஸ்டேட்டில் உள்ள பிரசித்திவாய்ந்த கோவில், ஸ்ரீ காளி அம்மன் கோவில் ஆகும். இக் கோவிலின் வருடாந்த திருவிழா இன்று நடைபெற்றுள்ளது. மேற்படி இக்கோவில் திருவிழாவுக்கு ஆட்டுப்பலி கொடுப்பது வழக்கம். ஆனால் பொதுபல சேனா என்னும் சிங்கள அமைப்பில் உள்ள பல சிங்களவர்கள் இன்று அங்கே திட்டமிட்டு ஒன்று கூடி, ஆட்டை வெட்டக்கூடாது என்றும், அது மிருக வதை என்றும் கோவில் பூசாரியோடும் பக்த்தர்களோடும் தர்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் அங்கே கூடியிருந்த தமிழ் பக்த்தர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது. இதனையடுத்து அங்கே பொலிசாரும் ஆயுதம் தாங்கிய படையினரும் குவிக்கப்பட்டார்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது.

சிங்கள தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான பொதுபலசேனா, சமீபத்தில் இஸ்லாமியர்களோடு முரண்பாட்டில் ஈடுபட்டார்கள். தற்போது இந்துக்களுடனும் முரண்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு ஆட்டை வெட்டுவது மிருக வதை என்றால், 40,000 தமிழர்களை அதுவும் பச்சிளம் குழந்தைகளை ஈவு இரக்கம் இன்றி கொன்ற இலங்கை இராணுவத்தை இவர்கள் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை. அப்போது கொத்துக் கொத்தாக தமிழர்கள் இறக்கும்போது இவர்கள் இயக்கம் எங்கே இருந்தது ? தற்போது இவர்கள் பேசும் மிருக வதை என்பது எல்லாம், இந்துக்களையும் இலங்கையில் ஒடுக்கிவைக்க இவர்கள் எடுத்துள்ள முதல் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது என்கிறார்கள் இலங்கையில் உள்ள இந்துக்கள். இதனை இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் பார்த்துக்கொண்டு இருக்கா என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten