தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடந்தால் இனப்படுகொலைக்கான நீதி கிடைக்காது: வைகோ- பொதுநலவாய மாநாட்டில் பாகிஸ்தான் கலந்து கொள்ளும் !


இலங்கையில் நடந்த இனப்படுகொலை மன்னிக்க முடியாத அக்கிரமமான செயல் எனவும் எனவே அங்கு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்த கூடாது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பண்ருட்டியில் நடந்த கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் வைகோ கலந்து கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடந்தால் இனப்படுகொலை விவகாரத்தில் நிரந்தரமான நீதி கிடைக்காமல் போய் விடும்.
பொதுநலவாய அமைப்பில் உள்ள எந்த ஒரு நாடும் அடிப்படை நெறிகளுக்கு எதிராக செயல்பட்டால் அந்த அமைப்பில் இருந்து நீக்கிவிடலாம் என்பது விதி. அதுபோல் நடந்ததால் முன்னர் ஒருமுறை பாகிஸ்தான் நாடு நீக்கப்பட்டது. எத்தியோப்பியாவில் ஏற்கனவே நடைபெற இருந்த பொதுநலவாய மாநாடு ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் தற்போது இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள கூடாது. அதுமட்டுமின்றி அந்த அமைப்பில் இருந்து இலங்கை நீக்கப்பட வேண்டும்.
இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த கனடா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி அவுஸ்திரேலியா பிரதமரும் கருத்து தெரிவித்துள்ளார் என்றார்.
பொதுநலவாய மாநாட்டில் பாகிஸ்தான் கலந்து கொள்ளும் - நவாஸ் ஷெரீப்
கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் கலந்து கொள்ளும் என்று அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற பாகிஸ்தான் பிரதமர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்லாமபாத்தில் இன்று பாகிஸ்தான் பிரதமரை சந்தித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மாநாட்டில் கலந்து கொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்ததுடன் பாகிஸ்தான் புதிய பிரதமராக பொறுபேற்றமை மற்றும் புதிய அரசாங்கத்திற்கான இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVgo6.html#sthash.GKAZWG42.dpuf

Geen opmerkingen:

Een reactie posten