தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 augustus 2013

புலிகள் வலையமைப்புகள் மேற்குலக அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுக்கின்றன !

நவிப்பிள்ளையின் நடவடிக்கையில் மாற்றம் எதுவும் பெரிதாக இல்லை. இன் நிலையில் மகிந்தர் தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்துள்ளார்:

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய வலையமைப்புகள் பிரதான மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுத்து இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் அவர்களை ஈடுபடவைக்கின்றன என்று மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். மனித உரிமைகள் பிரச்சினைகளை கிளப்பியே இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அவர்களை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவைக்கின்றனர் என்றும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டில் யுத்தத்தில் தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்ட தமிழீழ புலிப் பயங்கரவாதிகளுக்கு சார்பான சர்வதேச வலையமைக்குள் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை களவாக அனுப்பும் தொழிலில் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். (அதாவது ஆட்கடத்தலில் ஈடுபடும் தனது மகனை இவர் காப்பாற்றுகிறாராம்)

'த ஒஸ்றேலியன்' பத்திகைக்கு அளித்த விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் கொள்கை எமக்கு பிடித்திருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு போய்விட்டால் அவுஸ்திரேலிய அரசாங்கம் உங்களை கவனித்துக்கொள்ளும், உதவிப்பணம் வழங்கும் இலவச மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (அதாவது இப்படிச் சொல்லியே மகிந்தரின் மகன் தமிழர்களை கடத்தி வருகிறார்) இவருக்கு தானே அந்த விடையம் புரியும். 

மேலும் கருத்து தெரிவித்த மகிந்தர் ,புலிகள் தோற்கடிக்கப்பட்டமையால் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கு பாதுகாப்பு நன்மைகளும் கிடைத்துள்ளன என்றும் கூறியுள்ளார். புலிகள் என்ன அவுஸ்திரேலியா மீது படையெடுக்க இருந்தார்களா என்ன ?


Geen opmerkingen:

Een reactie posten