தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 augustus 2013

சுற்றுலா மையங்களாக இனப்படுகொலை - சுனாமி அடையாளங்கள்: கறுப்பு உல்லாசம் !

இனஅழிப்பு மற்றும் சுனாமி ஆகிய மனிதப் பேரழிவுகள் இடம்பெற்ற இடங்களை சுற்றுலா மையங்களாக அனைத்துல உல்லாச சுற்றுலா நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றமை தொடர்பில் பிரென்சு ஊடகமான lanouvellerepublique தனது பதிவினைச் செய்துள்ளது.
Dark Tourisme எனும் புத்தகத்தினை மையமாக கொண்டு வரையப்பட்டுள்ள இப்பதிவில் யூத இனத்தவர்கள் மீதான நாசிப் படைகளினது படுகொலைச் சின்னமாக ஜேர்மனியில் விளங்கும் முகாம் உல்லாசிகளின் முதன்மை கறுப்புச் சுற்றுலா தொடக்கம் என வர்ணித்திருக்கின்றது.
இலங்கை, றுவண்டா, ஆப்கானிஸ்தான் என உலக அளவில் போரினாலும் இயற்கை பேரழிவுகளினாலும் பெரும் மனித அவலங்கள் இடம்பெற்ற இடங்கள் இன்றைய உல்லாச துறையின் கறுப்புச்சுற்றுலா என வர்ணித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் மையப்படுத்தி வன்னிப் பெருநிலப்பரப்பில் சிறிலங்கா அரச படைகள் நடத்திய கொடிய போரின் அழிவுச் சின்னங்களையும் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் வளங்களையும் சுற்றுலா வலயங்களாக சிறிலங்கா மாற்றி வருகின்றது.
இதேவேளை தென்னிலங்கைச் சிங்களவர் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களில் இருந்து இலங்கைக்கு செல்லும் தமிழர்களும் சிறிலங்கா அரச படைகளது சுற்றுலா வலயங்களை கண்டுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten