தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது!- சரத்குமார்!- பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை!- சல்மான் குர்ஷித்!



இலங்கையில் நடைபெற இருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்கக்கூடாது. இந்தியாவின் பிரதிநிதித்துவம் கூட இருக்கக்கூடாது. இவ்வாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை அரசுக்கு நமது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிப்பதற்கான ஒரு வாய்ப்புதான், இலங்கையில் நடைபெற இருக்கும் கொமன்வெல்த் மாநாடு. அம்மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரத்திற்காக இந்திய அரசு பங்கேற்கவில்லை என்று தெரியவரும் போதுதான் மற்ற நாடுகளும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்வதற்கான ஒரு வாய்ப்பும், சூழ்நிலையும் உருவாகும்.
இந்த முடிவு இனி வரும் காலத்திலாவது இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் வாழ்வில் அக்கறை கொண்டு செயல்படுவதற்கான அச்ச உணர்வையும், சூழ்நிலையையும் உருவாக்கும்.
எனவே, இலங்கையில் நடைபெற இருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்கக்கூடாது. இந்தியாவின் பிரதிநிதித்துவம் கூட இருக்கக்கூடாது. இதற்கான காரணம் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் வன்செயல்கள் என்பதாக இருக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கொமன்வெல்த் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை: சல்மான் குர்ஷித்
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் தலைவர்களின் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது தொடர்பாக மத்திய அரசு என்ன முடிவு எடுத்துள்ளது என்று நேற்று மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி. ராஜா, அதிமுக உறுப்பினர் மைத்ரேயன், பாஜக உறுப்பினர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள கொமன்வெல்த் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.
அமைச்சரின் பதிலில் அதிருப்தியடைந்த டி. ராஜா, "இலங்கை கூட்டத்தில் இந்தியா பங்கேற்றால் அது அந்நாட்டில் நடைபெற்ற இனப் படுகொலையை அங்கீகரித்தது போல ஆகும்' என்றார்.
அதையடுத்து, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரனீத் கௌர், கொமன்வெல்த் தலைவர்களின் கூட்டத்தை இலங்கையில் நடத்த 2009ம் ஆண்டில் முடிவு எடுக்கப்பட்டது.
நாட்டு நலன், வெளியுறவுக் கொள்கை, நட்பு நாடுகளின் உறவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவை விரைவில் எடுக்கும் என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVhw5.html#sthash.QqsY2QbY.dpuf

Geen opmerkingen:

Een reactie posten