தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 augustus 2013

லண்டனில் இன்று சினி-வேல்ட் அலுவலகம் தமிழர்களால் முற்றுகையிடப்படவுள்ளது !

தமிழகர்களின் நியாமான விடுதலை போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நியாப்படுத்தி மதராஸ் கபே என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன் நிலையில் இத் திரைப்படத்தை லண்டனில் நாளை (23) சினிவேர்ட் தனது திரையரங்கில் வெளியிடவுள்ளது. இத்திரைப்படத்தை லண்டன் திரையரங்கில் போடவேண்டாம் என்று, பல நூறு தொலைபேசி அழைப்புகள் சினிவேல்ட் க்குச் சென்றுள்ளது. இருப்பினும் தாம் திரையிட்டே தீருவோம் என்று அடம்பிடிக்கிறார்கள், அவர்கள்.

எனவே தனைக் கண்டித்து இன்று மாலை 4 மணி முதல் 6 மணிவரை முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்த, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) அழைப்புவிடுத்துள்ளது. சினிவேல்டின் தலைமை அனுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு முன்பாகவே போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழீழ லட்சியத்தில் தொடர்ந்து பயணிக்கவும் மாவீரர்களின் கனவை நனவாக்கவும் அணைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்களையும் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

போராட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரவிபரங்கள்:

காலம் : THURSDAY 22 AUGUST 16:00 – 18:00
இடம் : CINEWORLD HEAD OFFICE | POWER ROAD STUDIOS
POWER ROAD | CHISWICK | LONDON | W4 5PY |
TUBE : DISTRICT LINE to GUNNERSBURY | BUS : 440
மேலதிக விபரங்களுக்கு : TCC-UK : Tel 02033719313

உங்கள் எதிர்ப்புக்களை திரையரங்கிற்கு தொலைபேசி மூலமாகவும் வெளிப்படுத்தலாம்.
தொ.இல: 02087424010 ....

Geen opmerkingen:

Een reactie posten