வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரை நிகழ்வு பளைப் பகுதியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன், வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் ப.அரியரட்ணம், த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை ஆகியோருடன் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் பரப்புரைக் குழுவினர் பளைப் பிரதேத்தின் வீதிகளில் நடந்து அங்குள்ள கடைகள், வர்த்தக நிலையங்களிலுள்ள வர்த்தகர்களிற்கும் பொது மக்களிற்கும் தேர்தல் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன் வாக்களிப்பு முறை பற்றியும் விளக்கமளித்தனர்.
ஆளும் தரப்பு தேர்தல் வெற்றிக்காக மோசடிகளினில் குதித்துள்ளது! கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன்!!
எவ்வாறாயினும் வடக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்றுவிடவேண்டுமென அரசு பாடுபடுகின்றது. அதற்காக முறைகேடான தேர்தலொன்றை நடத்த அரசு முற்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று யாழ்.ஊடக அமையத்தினில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டினில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வடக்கு தேர்தலிற்கு தேர்தல் சிரேஸ்ட தலைமை தாங்கும் அதிகாரிகளாக பணியாற்ற அம்பாறை மாவட்டத்திலிருந்து முஸ்லீம் மற்றும் சிங்கள அதிகாரிகளை தருவிக்க முயற்சிகள் நடக்கின்றது.வடக்கினில் தேர்தல் கடமைகளை ஆற்றக்கூடிய போதிய அதிகாரிகள் இருக்கிறார்கள். அதே போன்று வடக்கிற்கு வெளியேயும் தமிழ் தெரிந்த போதிய அதிகாரிகள் இருக்கிறார்கள். இந்நிலையினில் அம்பாறையிலிருந்து ஏன் தேர்தல் பணிகளிற்கு அதிகாரிகளை இறக்குமதி செய்ய வேண்டுமெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள்...
தேர்தலில் எவ்வாறேனும் வெற்றி பெற்றிருக்கவேண்டுமென்ற நோக்கனில் படையினர் முழுமையாக ஆளும் தரப்பின் பிரச்சார நடவடிக்கைகளினில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் காலத்தினில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தமுடியாது. ஆனால் தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்தினில் தங்கியிருந்த அதே நாளன்று கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்திக்கு எதிராக நகரினில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அவ்வேளை பொலிஸார் வெறுமனே வேடிக்கை பார்த்த வண்ணமிருந்தனர்.அப்பட்டமாக நடக்கும் ஆளும் தரப்பின் தேர்தல் விதிமுறைமைகளை மீறும் நடவடிக்கைகள் தொடர்பினில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்திருந்த போதும் அவர் தனக்குள்ள அதிகாரங்களைப்பயன்படுத்தி அதனை தடுத்து நிறுத்த தவறிவிட்டதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் அங்கு தெரிவித்தார்.
See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVgp1.html#sthash.CHtRdI7J.dpuf
Geen opmerkingen:
Een reactie posten