குறிப்பிட்ட இச் சிங்கள இராணுவச் சிப்பாய், தாம் தங்கும் விடுதியில் இருந்து எடுத்த புகைப்படங்களையே வெளியிட்டுள்ளார். அதில் அவர் நச்சுவாயு பிரயோகிக்கப்படும் போது அணியும் முகமூடியுடன் காட்சியளிப்பதோடு சில குறிப்புகளை எழுதியுள்ளார். நச்சு வாயுக் குண்டுகளை நாம் பிரயோகிக்க முன்னர் , ஒத்திகை பார்க்கிறோம் என்று அதில் எழுதியுள்ளார். இச் செய்தி பலரைச் சென்றடைந்துள்ள காரணத்தால், தனது பேஃஸ் புக் கணக்கில் இருந்து அந்த குறிப்புகளை முதலில் நீக்கிய அவர், பின்னர் தனது படங்களையும் அகற்றிவிட்டார். இருப்பினும் அதற்கு முன்னதாகவே இப் புகைப்படங்களை சிலர் பதிவுசெய்துவிட்டார்கள்.
புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே 2009ம் நடைபெற்ற கடுமையான யுத்தத்தின் போது, இலங்கை இராணுவம் பல இடங்களில் புலிகளின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாது அவ்விடத்தை நோக்கி நச்சுவாயுக் குண்டுகளை ஏவியுள்ளார்கள். குறிப்பாக ஆனந்தபுரம் சமரிலும் இவ்வகையான நச்சுவாயுக் குண்டுகளை இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தி இருந்தார்கள். இதனால் அப்பகுதியில் இருந்த பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இருப்பினும் இலங்கை இராணுவம் தற்போது இச் செயலை மறுத்துவருகிறது. இதற்கு ஆதாரம் உண்டா என வினவிவருகிறது. இன் நிலையிலேயே இப் புகைப்படங்கள் ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=5548
Geen opmerkingen:
Een reactie posten