தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 augustus 2013

அடையாளம் இழந்த இனம் தன் இருப்பைத் தக்க வைக்க முடியாது: பா.உறுப்பினர் சி.சிறீதரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம் மாவை எம்.பியால் சாவகச்சேரியில் திறந்து வைப்பு
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 09:18.08 AM GMT ]
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம், சாவகச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசா அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளரும் சாவகச்சேரி றிபேக் கல்லூரி அதிபருமான க.அருந்தவபாலன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், அ.விநாயகமூர்த்தி, வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடும் யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் சயந்தன், திருமதி அனந்தி சசிதரன், இம்மானுவேல் ஆர்னோல்ட், தம்பிராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
 http://www.tamilwin.net/show-RUmryIRYMVgt4.html#sthash.KDqKnzK4.dpuf

அடையாளம் இழந்த இனம் தன் இருப்பைத் தக்க வைக்க முடியாது: பா.உறுப்பினர் சி.சிறீதரன்
[ சனிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2013, 08:34.34 AM GMT ]
தன்னுடைய தனித்துவ கலாசார, மொழி, நில அடையாளங்களை இழந்த இனம் இந்த பூமிப்பந்தில் தன் இருப்பை இழந்து விடும். பல வரலாற்று ரீதியான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து உலகப்பந்திலே எங்களுக்கென இடம் பிடித்துக் கொண்டவர்கள் தான் ஈழத்தமிழர்கள்.
இந்த அடையாளங்களைக் காப்பதில் கைதடி குமர நகர் சனசமூக நிலையமும் தன் காத்திரமான பங்கை வழங்கி வருகிறது என நேற்றையதினம் கைதடி குமரநகர் சன சமூக நிலையத்தில் நகுலன் கலை அரங்கை நாடா வெட்டித் திறந்து வைத்து உரையாற்றிய போது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது மண் பறி போகிறது. எமது கலாச்சாரம் மெல்ல அழிக்கப்படுகிறது. நாங்கள் கூடிக் கதைக்கும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. இந்த நிலை எப்படி மாறும் என்பதனை நாங்கள் உணரவேண்டும். இவை கூட ஒரு வகையான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாகும். இதை உணர்ந்து நாம் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், ஈ.சரவணபவன், சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி அதிபர் க. அருந்தவபாலன், கிளைத்தலைவர் செ.பாலசுப்பிரமணியம், சமுர்த்தி உத்தியோகத்தர் செ.ஜெயபாலன், கௌரவ விருந்தினர்களாக சாவகச்சேரி பிரதேச சபையினைச் சேர்ந்த ஜெ.சிற்சபாநாதன், அ.செந்தூரன், சட்டத்தரணியும் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் சட்டத்தரணி கே.சயந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உரைகளைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

Geen opmerkingen:

Een reactie posten