[ வியாழக்கிழமை, 22 ஓகஸ்ட் 2013, 10:05.53 AM GMT ]
சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் துரைராஜாவும், பிரதேச சபை உறுப்பினர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சட்டத்தரணி சயந்தன் ஆகியோரும், கட்சிப் பிரமுகர்களும் வட மாகாணசபைத் தேர்தல் குறித்த இக்கலந்துரையாடலில் பங்கேற்று பரப்புரை நிகழ்த்தியுள்ளனர்.
உண்மையான பிரச்சினைகளை பேசுபவர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்: சீதா ரஞ்சனி
[ வியாழக்கிழமை, 22 ஓகஸ்ட் 2013, 10:02.56 AM GMT ]
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய போட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்குடன் ஒப்பிடுகையில் தெற்கில் சிறியளவிலாவது ஊடகங்களுக்கு சுதந்திரம் உள்ளது. வடக்கில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கில் இராணுவமயபடுத்தப்பட்ட சமூகமே இருக்கின்றது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் இருந்துதான் அங்கு ஊடக அடக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது.
தற்பொழுது போருக்கு பின்னரான சூழ்நிலைகள் தொடர்பிலான செய்திகள் வெளியாவதை தடுக்க அங்கு ஊடக அடக்குமுறை பயன்படுத்தப்படுகிறது.
வடக்கில்தான் அதிகளவிலான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். அதுமட்டுமல்ல, ஊடகங்களில் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
வடக்கில்தான் அதிகளவிலான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். அதுமட்டுமல்ல, ஊடகங்களில் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
மக்களின் உண்மையான பிரச்சினைகளை எழுதுபவர்கள், பேசுபவர்கள்தான் இன்று பயங்கரவாதிகள் சித்தரிக்கப்படுகின்றனர்.
இன்று வடக்கில் எதனையும் செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. மனித உரிமை கோட்பாடுகள், மனித உரிமைகள், சுதந்திரம் போன்றவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் வடக்கில் ஊடகவியலாளர்கள் எல்லைக்குட்பட்டே தமது வேலைகளை செய்து வருகின்றனர்.
1992 ஆம் ஆண்டு அன்று காணப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவே சுதந்திர ஊடக அமைப்பு உருவாக்கப்பட்டது. அன்றிருந்த எதிர்க்கட்சியினரும் அதில் சம்பந்தப்பட்டிருந்தனர்.
ஊடக சுதந்திரம் அரசியல் போராட்டமாக மாறியது. சுதந்திர ஊடக அமைப்புதான் முதன் முதலில் பிரதான நீரோட்டத்தில் ஊடகவியலாளர்களுடன் ஊடக சுதந்திரத்திற்காக போராட்டங்களை ஆரம்பித்தது.
சிலர் ஆரம்ப விடயங்களின் பின்பு அமைதியாகிவிட்டனர். சிலர் நாட்டை விட்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காரணம் இன்று பேச முடியாது. பேசினால் தாக்கப்படுவார்கள்.
லசந்த விக்ரமதுங்க போன்று பிரதான ஊடக நிரோட்டத்தின் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவார்கள்.
வடக்கில் அதிகளவிலான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். போத்தல ஜெயந்த, நாமால், உபாலி தென்னகோன், கீத் நொயார் போன்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டர்கள்.
சிலர் தமக்கு என்ன நடந்து என்பதை வெளியில் கூற பயந்தனர். இந்த அடக்குமுறை காரணமாக அன்றைய காலத்தை விட தற்போது ஊடக செயற்பாட்டாளர்களின் பலம் குறைந்து விட்டது.
குறிப்பாக பிரதேச ஊடகவியலாளர்கள் தமது நேர்ந்தவற்றை வெளியில் கூற அஞ்சுகின்றனர். இப்படியான அச்ச உணர்வுடன் இன்று ஊடகவியலாளர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten