தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

பிரித்தானிய வீசா மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கொழும்பில் கைது!

பிரித்தானிய வீசா மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களைத் தயாரித்து பிரித்தானியாவிற்கு செல்ல முயற்சித்தவரே இவ்வாறு கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் வீசா மோசடிப் பிரிவினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே நான்கு தடவைகள் குறித்த நபர் விசா பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போலியான அடையாள அட்டையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களைப் பயன்படுத்தி வீசா பெற்றுக்கொள் முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபருக்கு பத்து ஆண்டுகள் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய குடிவரவு சட்டங்களை துஸ்பிரயோகம் செய்வோருக்கு எவ்வித நெகிழ்வுத் தன்மையும் காட்டப்பட மாட்டாது என உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten