தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

புதிய பெண்கள் அமைப்பு என்னும் பெயரில் தமது பெண்கள் அணியை சுயேட்சையாக களமிறக்கியது ஈ.பி.டி.பி

புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மாமனாரும் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டி!
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 06:10.26 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் மாமனாரான பாலசுப்பிரமணியம் பாலகிருஷ்ணன் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
வடமாகாண சபைத்தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் அவர் போட்டியிடவுள்ளார்.
இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருந்தும் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து சுயேட்சை குழுவாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
புதிய பெண்கள் அமைப்பு என்னும் பெயரில் தமது பெண்கள் அணியை சுயேட்சையாக களமிறக்கியது ஈ.பி.டி.பி
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 01:43.43 PM GMT ]
புதிய பெண்கள் அமைப்பு என்னும் பெயரில் ஈ.பி.டி.பி யினர் பெண் சுயேட்சைக் குழுவொன்றை வடமாகாண சபைத் தேர்தலில் களமிறக்கியுள்ளதாக தெரியவருகின்றது.
இவர்கள் இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் தமது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்ததோடு அவர்களது வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவியாகவும் முதன்மை வேட்பாளராகவும் உள்ள செல்வி தம்பிபிள்ளை இருதயராணி ஈ.பி.டி.பி யினருடன் இணைந்து அவர்களது அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் ஈ.பி.டி.பியில் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினைச் சேர்ந்த சுகுசிறிதரனின் பாரியரான திருமதி ஞானசக்திக்கு ஈ.பி.டி.பி யினரே ஆசனத்தை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந் நிலையிலேயே இந்த குழுவினர் இன்று காலை சுயட்சையாக களமிறக்கப்பட்டுள்ளனர். வட யாழ்ப்பாணத்திலுள்ள பெண் தலைமைக் குடும்பங்களே தமது வாக்கு இலக்கு என இவர்கள் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten