தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 15 augustus 2013

விடுமுறை நாட்களில் பாடசாலை மாணவர்களை அரச ஆதரவு நிகழ்விற்கு கட்டாயப்படுத்தி அழைப்பு: ஆளுநர் சந்திரசிறி அடாவடி !

விடுறைக் காலத்தில் வடமாகாணத்திலுள்ள பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கட்டாயப்படுத்தி அரச ஆதரவு நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் செய்தமை வடமாகாண ஆளுநர் சந்திரசிறி மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இந்த அரசாங்க ஆதரவு நிகழ்வு நடைபெற்றது. இதில் வடமாகாணத்தின் சகல பாடசாலைகளிலிருந்தும் அதிபர், ஆசிரியர்கள் அடங்கிலாக நான்கு பேர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் அதிகாரிகளும் மாணவர்களும் நிகழ்வில் அளவுக்கு மிஞ்சிக் கலந்து கொண்டதால் மண்டபத்திற்கு வெளியேயும் வருகைதந்தவர்கள் காவல் நிற்றும் நிலை ஏற்பட்டது.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு ஆளுநர் சந்திரசிறி அடாவடி செய்வது தொடர்பாக கல்வி சமூகத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதோடு இவ்வாறான செயற்பாடுகளை எவரும் தட்டிக் கேட்டபதில்லையென்றும் புலம்புகின்றனர்.
இதேவேளை இந்நிகழ்வில் சகல அதிகாரிகளும் சமூகமளிக்க வேண்டும் என்ற ஆளுநரின் உத்தரவால் அதிகாரிகள் அனைவரும் சமூமளித்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten