ஆலய வளாகத்திற்குள் உற்சேவம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தன்று ஒட்டப்பட்டிருந்த குறித்த சுவரொட்டிகள் நேற்று பல இடங்களில் அகற்றப்பட்டிருந்த போதும், பொலிஸாரின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தும்.
குற்றவாளிகளுக்கும் மனிதாபிமானம் பார்க்கப்பட வேண்டும் என இலங்கையின் சட்டங்கள் குறிப்பிடுகின்றன. அதற்காகவே நீதிமன்றினால் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரும் அவர்களுடைய பெயர் விபரங்களை ஊடகங்களில் பிரசுரிக்க கூடாதென நீதிமன்றம் கூறுகிறது.
இந்த நிலையில் திருடிகள் என அடையாளப்படுத்தி தமிழ் பெண்களை புகைப்படம் பிடித்து அதனை சுவரொட்டிகளாக அச்சிட்டு மக்கள் கூடும் இடங்களில் ஒட்டுவது எவ்வளவு தூரம் மனிதாபமானமற்ற செயல் எனவும் மக்கள் விசனப்படுகின்றனர்.
அவர்கள் குற்றவாளிகளாக இருப்பினும் அவர்களது மறுவாழ்வுக்கு சட்டம் மற்றும் சட்டத்தை கையாள்பவர்கள் வழிசமைத்துக் கொடுக்க வேண்டுமே தவிர அவர்களை குற்றவாளிகளாக சமூகத்திற்கு அடையாளப்படுத்துவது மிகவும் மோசனமான நடவடிக்கை.
மேலும் திருட்டுக் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களை இவ்வாறு சுவரொட்டிகளில் அச்சிட்டு ஒட்டுவது இதுவே முதற்தடவை. அத்துடன், இவ்வாறான நடவடிக்கை மிகமோசமான மனிதாபிமானமற்ற நடவடிக்கை எனவும் மக்கள் விமர்சிக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten