தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 15 augustus 2013

இந்தியாவிற்கு ஆயுதம் விற்பனை செய்தமை தொடர்பில் சீனா அதிருப்தி!

இந்தியாவுக்கு ஆயுதம் விற்பனை செய்தமை தொடர்பில், சீனா இலங்கை அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று வருடங்களாக இலங்கையிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை கொள்வனவு செய்திருப்பதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சீனாவின் இலங்கைக்கான தூதுவர், இராணுவத் தளபதியை சந்தித்து, இது தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்கள், சீனாவினால் இலங்கைக்கு தரப்பட்டவை என்று கூறப்படுகிறது.
சீனாவின் தொழில்நுட்பங்களை ஆராயும் நோக்கில் இந்தியா இந்த ஆயுதங்களை கொள்வனவு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையிலேயே சீனா இந்த விடயத்தில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten