தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 augustus 2013

வடக்கு-கிழக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் ஏன் மன்னிப்பு கோரவில்லை: சுரேஸ் பிரேமசந்திரன்

கூட்டமைப்புக்கு ஆதரவளித்த உன்னிச்சை மக்கள் பழிவாங்கப்பட்டனர்
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 02:11.51 AM GMT ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளித்திருந்தமையால், மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை குளத்தை நம்பியுள்ள சுமார் 1830 ஏக்கர் நிலத்தில் பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நீர்பாசனம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உன்னிச்சை குளத்தின் இடபக்க குழாயில் விநியோகிக்கப்படுகின்ற நீரை நம்பி இந்த விவசாயிகள் பயிர்செய்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் கடந்த மாகாண சபைத் தேர்தலில் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளித்திருந்தமையால், அதற்கு தண்டனை வழங்கம் வகையில் கடந்த ஜுலை மாதம் 25ம் திகதி முதல் இந்த குழாய் மூடப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனே இந்த குழாயில் இருந்து நீரை விநியோகிக்க விட வேண்டாம் என்று, மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்திற்கு கட்டளையிட்டிருப்பதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த 28ம் திகதி ஜுலை மாதம் இதற்கு இதற்கு எதிராகவும், மாவட்ட நீர்பாசனதுறை அதிகாரி அரசாங்கத்துக்கு கைக்கூலியதாக செயற்படுவதாகவும் தெரிவித்து பிரதேச விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இருந்தனர்.
இதில் 28 பேர் வரையில் காயமடைந்திருந்த போதும், இந்த விடயம் ஊடகங்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது.
வடக்கு-கிழக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் ஏன் மன்னிப்பு கோரவில்லை: சுரேஸ் பிரேமசந்திரன்
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 02:16.59 AM GMT ]
அமைச்சர் பசில் ராஜபக்ஸ, வடக்கிலும் கிழக்கிலும் அரசாங்கத்தினால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பில் ஏன் மன்னிப்பு கோரவில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்ப கேள்வி எழுப்பியுள்ளது.
கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில வெலிவேரியாவில் இடம்பெற்ற தாக்குதலின் போது,
மூன்று பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ பொது மக்களிடம் மன்னிப்பு கோரி இருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுரேஸ் பிரேமசந்திரன், ஆயிரக்கணக்கான மக்கள் கிழக்கிலும் வடக்கிலும் கொன்று குவிக்கப்பட்ட போது, ஏன் அரசாங்கம் அந்த பிரதேச மக்களிடம் மன்னிப்பு கோவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
யுத்த காலத்தில் பொது மக்கள் கொல்லப்பட்டமையை ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலாளரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஆனாலும் ஏன் அவர்கள் இந்த விடயத்தில் மன்னிப்பு கோரவில்லை என்று சுரெஸ் பிரேமசந்திரன் கோரியுள்ளார்.
இதன் மூலம் அரசாங்கம் தென்னிலங்கை மக்களை ஒருமாதிரியாகவும், வடக்கிழக்கு மக்களை வேறொரு மாதிரியாகவும் அணுவது அம்பலமாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten