[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 02:28.24 AM GMT ]
இது தெடர்பான உடன்படிக்கை ஒன்றில் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் கைச்சாத்திட்டுள்ளார்.
வெலிவேரியவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, இராணுவம் பொது மக்கள் மீது நடத்திய தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமெரிக்கா செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் காலங்களில் இலங்கைக் கொடியுடன் இலங்கைக் கடற்பரப்பில் சீனர்கள் மீன்பிடியில் ஈடுபடவுள்ளனர்.
சுமார் 40 கப்பல்களில் மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரோலர் முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பிடிக்கப்படும் மீன்களில் 30 வீதம் சீன நிறுவனத்திற்கும், பத்து வீதம் மீன்பிடித்துறை அமைச்சிற்கும், 60 வீதம் அமைச்சர் ஒருவரின் இணைப்பாளது நிறுவனத்திற்கும் வழங்கப்படும் வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சீன நிறுவனங்கள் மீன்பிடியில் ஈடுபட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என இலங்கை மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
வெலிவேரிய சம்பவம்! கூட்டமைப்பு அமெரிக்காவிடம் முறைப்பாடு செய்ய உள்ளது: தேசப்பற்றுடைய தேசிய இயக்கம்
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 02:21.53 AM GMT ]
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கட்சியின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் தற்போது கனடாவில் உள்ளனர்.
அங்கு அவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து அமெரிக்கா செல்கின்றனர். அங்கு ராஜாங்க திணைக்களத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெலிவேரியாவில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான ஆதாராங்களுடன் அங்கு சென்றிருப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை இராணுவத்தினரை எவ்வாறேனும் கூண்டில் ஏற்றவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கங்கனம் கட்டி இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten