தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 augustus 2013

குடும்ப அரசியலை இல்லாமல் செய்யும் அதிகாரம் மக்களிடம் காணப்படுகின்றது!

சிகை அலங்காரத்திற்காக பெருந்தொகை பணத்தைச் செலவிடுகின்றார் அமைச்சர் விமல் வீரவன்ச
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 02:07.41 AM GMT ]
அமைச்சர் விமல் வீரவன்ச சிகை அலங்காரத்திற்காக பெருந்தொகை பணத்தைச் செலவிட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார். 
அமைச்சருக்கான மாதாந்த சம்பளத்தை விடவும் அழகுக் கலைத் தேவைகளுக்கு அவர் அதிகம் செலவிடுகின்றார்.
மாதமொன்றுக்கான சிகை அலங்காரச் செலவு 25000 முதல் 35000 ரூபாவாகும்.
இலங்கையின் முதனிலை சிகை அலங்கார நிறுவனமொன்றின் சேவையை அவர் பெற்றுக்கொள்கின்றார்.
நகங்களை அழகாக வளர்ப்பதற்காகவும் அவர் பெருந்தொகைப் பணத்தைச் செலவிடுகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கலேபிந்துனுவெவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப அரசியலை இல்லாமல் செய்யும் அதிகாரம் மக்களிடம் காணப்படுகின்றது!
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 02:09.51 AM GMT ]
குடும்ப அரசியலை இல்லாமல் செய்யும் அதிகாரம் பொதுமக்களிடம் காணப்படுவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறவினர்களுக்கு அதிகளவு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நான் எனது உறவினர் எவரையும் அரசியலில் ஈடுபடுத்தவில்லை.
இன்று ஒட்டுமொத்த அரசியலேய வர்த்தகமயப்பட்டுள்ளது.
காலம் காலமாக கட்சிக்காக சேவை செய்தவர்கள் உதாசீனம் செய்யப்படுகின்றனர்.
தேர்தல் காலத்தில் பணத்தை வாரி இறைக்கும் நபர்களுக்கு விருப்பு வாக்கு அளிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிக வலுவான கட்சி.
எவரையும் பணத்திற்கு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten