தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 augustus 2013

கண்டியில் முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் !

முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகத்தின் மீது கண்டியில் நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் வேட்பாளர் உவைஸ் ரம்ஸான் தெரிவித்தார்.
கண்டி, கல்ஹின்னை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமால் திறந்து வைக்கப்பட்ட அலுவலகத்தின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அலுவலகத்தினுள் புகுந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன், அங்கிருந்த ஒருவரையும் தாக்கியதாக உவைஸ் ரம்ஸான் குறிப்பிட்டுள்ளார்.
காயத்திற்குள்ளானவர் தற்போது அங்கும்புரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வேட்பாளர் தெரிவித்தார். இந்த தாக்குதலின்போது அலுவலக உடமைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten