இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இன்னமும் இந்தியா தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை விடுத்த அழைப்பினை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ இல்லை என வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் பங்கேற்பது குறித்து இன்னமும் இந்தியா எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பையும் விடுக்கவில்லை.
54 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள்.
மாநாட்டில் பங்கேற்பதாக 150 முதல் 200 பிரதிநிதிகள் ஏற்கனவே உறுதியளித்துள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்பது குறித்து இப்போதே உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
கனடா மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என உறுதியாக அறிவிக்கவில்லை.
இந்த மாத ஆரம்பத்தில் கனேடிய பிரதிநிதியும் பொதுநலவாய நாடுகள் பிரதிநிதிகளுடன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
இவர்கள் மாநாட்டின் ஏற்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
கனடாவும் மாநாட்டில் பங்கேற்கும் என எதிர்பார்க்கின்றோம் என சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் அமர்வில் பங்கேற்பது தொடர்பில் இந்தியாவிடம் இருந்து எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது
இலங்கை வெளியுறவு அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்
இலங்கை மாநாட்டை புறக்கணிப்பது தொடர்பில் இந்தியா எவ்வித கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்
இந்தநிலையில் பொதுநலவாய மாநாட்டில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக வாஸ் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten