தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 augustus 2013

படுவான்கரை பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாட்டை காப்பாற்றுவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசு மக்களின் சொத்துக்களை சூறையாடுகிறது: விக்ரமபாகு கருணாரட்ன
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 06:48.48 AM GMT ]
நாட்டை காப்பற்ற ஆட்சி அதிகாரத்தை தாருங்கள் என்று மக்களிடம் வாக்குகளை கேட்டு அதிகாரத்தை கைப்பற்றிய மகிந்த அரசாங்கம், நாட்டு மக்களுக்கு சொந்தமான நிலங்கள், சொத்துக்கள், கனிய வளங்களை வெளிநாட்டு கம்பனிகளுக்கு தாரைவார்த்து வருகிறது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
வடக்கிலும் தெற்கிலும் மக்களுக்கு சொந்தமான நிலங்களை அரசாங்கம் சூறையாடி அவற்றை பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்தும், குத்தகைக்கும் விட்டு வருகிறது.
அதேநேரம் அபிவிருத்தி செய்ய போவதாக தெரிவித்து, நகர அபிவிருத்தி அதிகாரச் சபை வழியாக நகரை சுற்றியுள்ள நிலங்களை அரசாங்கம் பலவந்தமாக அபகரித்து வருகிறது.
இவ்விதமாக அரசாங்கம், மக்களுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்வதுடன், அவற்றை குத்தகைக்கும் விட்டு தமது பொதிகளை நிரப்பி கொள்கிறது.
இதன் மூலம் அரசாங்கம் நாட்டை காப்பற்றியதா இல்லை மக்களின் சொத்துக்களை காப்பாற்றியதா என்பது தெளிவாகியுள்ளது என்றார்.
படுவான்கரை பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 05:52.50 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பகுதியில் அத்துமீறிய பெரும்பான்மையின மக்களின் குடியேற்றத்தினைக் கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நுளைவாயிலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல்வேறு வாசகங்கள் தங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்கரர்கள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
இறுதியில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அவர்களினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் மேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் மற்றும் தமிழ் தேமசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், கி.துரைராசசிங்கம், கோ.கருணாகரம், ஞா.கிஸ்ணபிள்ளை, மா.நடராசா, இ.பிரசன்னா, ஆகியோர் உட்படதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இரண்டாம் இணைப்பு
பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கெவிலியாமடு மற்றும் புலுக்குனாவ ஆகிய பகுதிகளில் 21 பெரும்பான்மையின குடும்பங்கள் பௌத்த பிக்கு ஒருவரினால் நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 16 நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது.
இந்த சட்ட விரோத குடியேற்றங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த குடியேற்றங்கள் தொடர்பில் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த குடியேற்றங்களுக்கு சில அரசியல் சக்திகளும் துணை நிற்பதாகவும் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
இந்த குடியேற்றங்களை தடுத்து நிறுத்தி சட்ட விரோத குடியேற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படவேண்டும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்டோர் பிரதேச செயலாளரே!
அத்துமீறிய குடியேற்றத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடு,காணி அபகரிப்பை நிறுத்து,பிரதேச செயலாளரே!
பிழையான அணுகுமுறைக்கு துணைபோகாதே, பதவி பல் இழிப்பு அல்ல, பட்டம்,பதவி உயர்வுக்காக படுவான்கரை நிலத்தினை அடகுவைக்காதே, அமைச்சர்களின் முகஸ்துதிக்கு துணைபோகாதே, ஆளுனரே ஆக்கிரமிப்புக்கு துணைபோகாதே, மட்டக்களப்பு நிர்வாகத்தினை அம்பாறைக்கு தாரை வார்க்காதே போன்ற பதாகைகளையும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.
இதன்போது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னத்திடம் வழங்கப்பட்டது.
இதேநேரம், கவன ஈர்ப்பு போராட்டத்தினையொட்டி பட்டிப்பளை பிரதேசத்தினை சூழ பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதேவேளை தங்களை கெவிலியாமடு மற்றும் புலுக்குனாவ அகிய பகுதிகளில் இருந்து அகற்ற நடவடிக்கையெடுக்கப்படுதாக தெரிவித்து பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களாலும் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை சாத்வீகப் போராட்டங்கள் வெடிக்கும்- பா.அரியநேத்திரன்
அத்துமீறிய குடியேற்றத்துக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்காவிடின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசத்தில் மாத்திரமின்றி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களும் சாத்வீகப் போராட்டங்களும் வெடிக்கும் என்பதனை நாம் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, பட்டிப்பளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட காணி அபகரிப்பு மற்றும் அத்துமீறிய குடியேற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பௌத்த குரு ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநரின் வாய்ச்சொல் அனுமதியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் அமைந்துள்ள பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடு மற்றும் புழுக்குனாவை போன்ற கிராமங்களில் அத்துமீறி சிங்கள மக்களின் குடியேற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றார்.
இந்த சட்டவிரோதச் செயல் நிறுத்தப்படல் வேண்டும். அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்ற நோக்கத்திற்காகவேதான் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப் பட்டிருக்கின்றது. இது யாரையும் புன்படுத்துவதற்கோ கொச்சைப் படுத்துவதற்கோ இல்லை. ஆனால் இந்தநாட்டில் சட்டம் ஒன்று இடம்பெறுவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் காணி அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு சட்டம் என்பது இந்த நாட்டில் இல்லாமல் இருந்து கொண்டிருக்கின்றது.
எங்கள் மக்களை சுதந்திரமாக வாழவிடுங்கள் என்றுகூறிதான் இந்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். இதற்கு எங்களுக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்காவிடின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசத்தில் மாத்திரமின்றி மாவட்டத்தின் நாலா பக்கமும் ஆர்ப்பாட்டங்களும் சாத்வீகப் போராட்டங்களும் வெடிக்கும் என்பதனை நாம் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிட்டார்

Geen opmerkingen:

Een reactie posten