தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 augustus 2013

கொழும்பில், வெளிநாட்டு பிக்கு ஒருவர் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்

மீனவர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படும்: இந்தியாவில் ஜீ.எல்.பீரிஸ் உறுதி
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 07:12.35 AM GMT ]
இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை நேற்று மாலை அவரது செயலகத்தில் சந்தித்து பேசினார்.
இதன்போது, இலங்கை - இந்திய மீனவர் நெருக்கடியை தீர்க்கும் முகமாக இருதரப்பினருக்குமிடையே நீதியான தீர்வு ஒன்று தொடர்பில் ஆராய வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள, ஜீ.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித்தை சந்தித்து கலந்துரையாடும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் நிரந்தர, நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்கும் வழிமுறைகளை ஆராயவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வருடத்தின் முதல் மாதம் தொடக்கம் சுமார் 122 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பல படகுகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் வாராந்தம் இலங்கை கடல் பரப்பிற்குள் அத்துமீறும் மீனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாளை பாகிஸ்தானுக்கு விஜயம் உள்ளார்.

கொழும்பில், வெளிநாட்டு பிக்கு ஒருவர் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 06:53.14 AM GMT ]
கொழும்பு ராஜகிரிய கலபலுவாவ சுதர்சனாராம விகாரையில் தங்கியிருந்த வெளிநாட்டு பௌத்த பிக்கு ஒருவர் இனந்தெரியாதவர்களினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக வெலிகடை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவரே தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
தாக்குதல் காரணமாக பௌத்த பிக்குவின் உடலில் சில இடங்களில் கடும் இரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Geen opmerkingen:

Een reactie posten