தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 augustus 2013

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்ககூடாது என்று லோக்சபாவில் மீண்டும் கோரிக்கை

இலங்கையின் வெளியுறவு அமைச்சை குற்றம் சுமத்துகிறார் சச்சின்வாஸ்
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 02:16.51 AM GMT ]
இலங்கையின் நற்பெயரை பாதுகாக்க வெளிவிவகார அமைச்சு தவறிவிட்டதாக, ஜனாதிபியின் ஆலோசர் சஜின் வாஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை பல்வேறு அழுத்தங்களுக்கு உட்பட்டது. இது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு இலக்குகளை முன்வைத்திருந்தது.
எனினும் வெளிவிகார அமைச்சு இதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் செயற்படுகின்ற அமெரிக்க தூதுவர் தன்னிச்சையாக நடந்துக் கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் சொந்த உள்விவகாரங்கள் தொடர்பில் அவர் தமது அதிகாரங்களை மீறி தலையீடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வருகின்றமை, அரசாங்கத்துக்கு சிறந்த வாய்ப்பாக கருதுவதாகவும், எனினும் சிலருக்கு இது அவல் கிடைத்தாற்போல் ஆகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜின் வாஸ் குணவர்த்தன இலங்கை வெளியுறவு அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்ககூடாது என்று லோக்சபாவில் மீண்டும் கோரிக்கை
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 02:20.00 AM GMT ]
கொழும்பில் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்துக் கொள்ள கூடாது என்று நேற்று மீண்டும் லோக்சபாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் என்பன இதனை வலியுறுத்தின.
நேற்று லோக்சபாவில் உரையாற்றிய அ.தி.மு.கவின் பாராளுமன்ற உறுப்பினர் எம். தம்பிதுரை இலங்கை இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைகளை இந்தியா மறந்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவின் நட்பு நாடாக இலங்கையை கருத முடியாது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளகோவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எந்த அழுத்தங்களையும் இலங்கை பொருட்படுத்தியதில்லை.
இந்தியாவின் பேச்சுக்கு மதிப்பளிக்காக இலங்கையை நட்பு நாடாக கருத முடியாது என்று அவர் அவர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten