தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 augustus 2013

யாழ். அரியாலையில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த வீடுகள் விடுவிப்பு

பரீட்சையில் குறைந்த புள்ளிகள் பெற்றதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை!- தம்பலகாமத்தில் சம்பவம்
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 02:20.42 PM GMT ]
பாடசாலை தவணை பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்றதால் மனமுடைந்த 11 வயது மாணவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமம் சாமிமலை பிரதேசத்தில் இன்று நடந்துள்ளது.
பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்றால் மனமுடைந்த மாணவன் தனது பாடசாலை சிருடைக்காக வழங்கப்பட்டிருந்த கழுத்து கட்டியில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்த மாணவனின் தந்தை விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தாய் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

யாழ். அரியாலையில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த வீடுகள் விடுவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 02:38.13 PM GMT ]
யாழ்.அரியாலையில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த தனியாருக்குச் சொந்தமான் வீடுகள் மற்றும் காணி என்பன இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமான விடுவிக்கப்பட்டுள்ளன.
யாழ் அரியாலைப் பகுதியில் 512வது படைப்பிரின் பயன்பாட்டில் இருந்த 35 வீடுகள் மற்றும் ஆறு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இன்று  பிற்பகல் 2.00 மணிக்கு அரியாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க இந்த வீடுகள் மற்றும் காணிகள் விடுவிப்பிப்பதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவிடம் கையளித்தார்.
1997ம் ஆண்டு தொடக்கம் இந்த பகுதி வீடுகள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது.
தற்போது வைத்தியசாலை வீதியில் 512வது படைப்பிரிவிற்கான நிரந்தர முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த வீடுகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 512வது படைப்பிரிவின் கீழ் இருந்து 90 வீதமான பொதுமக்களின் வீடுகள் மற்றும் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது என்று அப் படைப்பிரிவின் தளபதி கேணல் அஜித் பல்லேகல தெரிவித்திருக்கின்றார்.
இன்றைய நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி கேதீஸ்வரன், மற்றும் பாதுகாப்பு படைகளின் தளபதிகள், இராணுவத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten