[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 02:38.33 PM GMT ]
மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்று வருகையில் அங்கு பாதுகாப்பு பணியில் பெருமளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் புலனாய்வுத்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன்போது கஞ்சா வைத்திருந்த திருகோணமலையை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளன. அவரிடம் இருந்து 390 மில்லிக்கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இரவு வேளை பூசைகளில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு வருகையில் மதுபோதையில் அதிகளவானோர் நடமாடுவதால் ஆலயம் வருவோர் மிகுந்த அசெளகரியங்களுக்குள்ளாவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலய வளாகத்துக்குள் மதுபோதையில் நடமாடுவோரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக மதுபோதையில் இளைஞர் குழுவினர் இரவுவேளைகளில் பெரும் அசௌகரியங்களை பொதுமக்களுக்கு ஏற்படுத்திவருவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆலய வளாகத்துக்குள் விசேட தினங்களில் மதுபோதையில் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலய வளாகத்துக்குள் அடியார்களின் பாதுகாப்பு கருதி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதன் காரணமாக கொள்ளைச்சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்!
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 03:23.28 PM GMT ]
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ஜகத் ஜயசூரிய, பொக்ஸிங், ஹொக்கி, கிரிக்கட் போன்ற விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
1978ம் ஆண்டு ஜுலை 07ம் திகதி கெடட் அதிகாரியாக இராணுவச் சேவையில் இணைந்து கொண்ட ஜெனரல் ஜகத் ஜயசூரிய இலங்கை இராணுவத்தின் 19ம் இராணுவத் தளபதியாக கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி பதவியை ஏற்றுக்கொண்டார்.
அவரது இராணுவ வரலாற்றில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் பாதுகாப்பு துறை தொடர்பான பல்வேறு கற்கை நெறிகளை கற்றுள்ளதுடன், இராணுவக் கட்டமைப்பில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.
மேலும் இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின் போது வன்னி பாதுகாப்பு படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten