[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 02:02.54 PM GMT ]
இந்த சந்திப்பு அமைச்சர் ஹக்கீமின் கொள்ளுப்பிட்டி இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பற்றியும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது.
வெலிவேரிய வன்முறைச் சம்பவம்! பக்கச்சார்பற்ற விசாரணைகள் தேவை: ரணில்- காயடைந்தவர்களில் மூவர் ஆபத்தான நிலையில்
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 01:37.38 PM GMT ]
வெலிவேரியவில் இன்று ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சம்பவம் தொடர்பிலான சகல விடயங்களை முன்வைத்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்துவேன்.
சம்பவம் குறித்து விசேட நியாயமான, பக்கச்சார்பற்ற விசேட விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். அவரது மரண சடங்கை அமைதியாக நடத்த பொறுப்பு கூறவேண்டிய தரப்புகள் இடமளிக்க வேண்டும்.
ரத்துபஸ்வல மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைக்கு தீர்வுகண்டு, பிரதேசத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வந்து அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
அதேவேளை ரத்துபஸ்வல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில், மூன்று பேர் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக தெரியவருகிறது.
ஆபத்தான நிலைமையில் இருக்கும் இரண்டு பேர் விபத்து சேவை பிரிவின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் வயிற்று பகுதியிலும், மார்பு பகுதியிலும் ஏற்பட்டுள்ள காயங்கள் காரணமாக அவர்கள் சத்திர சிகிக்சைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஒருவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அவசர விபத்து பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில விக்ரமநாயக்க தெரிவித்தார்.
மேலும் ஒருவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அவசர விபத்து பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில விக்ரமநாயக்க தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten