தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர் விந்தன் கனகரட்ணத்திற்கு இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்!

வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு யாழ்ப்பாணத்தில் கொச்சைத்தமிழில் இராணுவத்தினர் பிரச்சாரம்!
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 04:14.09 PM GMT ]
எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாகாண சபைக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அரசாங்க கட்சிகள் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இன்று மாலை யாழ்.கொழும்புத்துறைப் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சிவில் உடையில் சென்ற இராணுவத்தினர் பொது மக்களிடம் அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
ஏன்? மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்க மாட்டார்களா? என்று அச்சுறுத்தும் தொனியில் மக்கள் மத்தியில் கொச்சைத் தமிழிலில் இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர்.
சில இடங்களில் வெற்றிலைக்கு வாக்களியுங்கள் என்றும் வெற்றியின் சின்னம் வெற்றிலை என்றும் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரது இச்செயற்பாடு காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
இம்முறை தேர்தலில் இராணுவத்தினர் பாரிய மோசடிகளை மேற்கொள்ளப் போகின்றனர் என்பதற்கான ஆரம்ப புள்ளியாக இராணுவத்தினரது பிரச்சார நடவடிக்கைகள் உள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர் விந்தன் கனகரட்ணத்திற்கு இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்!
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 04:18.07 PM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர் விந்தன் கனகரட்ணத்திற்கு இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இன்று மாலை அரியாலையிலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற புலனாய்வாளர்கள் விந்தன் தொடர்பாக பொது மக்களிடம் விசாரணை செய்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் விந்தனிற்கும் என்ன தொடர்பு? என்பது தொடர்பாகவும் விந்தன் பாவிக்கும் வாகனங்கள் தொடர்பாகவும் அவர்கள் விசாரித்துள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கூட்டமைப்பின் வேட்பாளர்களான சட்டத்தரணி சயந்தன் மற்றும் விடுதலைப் புலிகளின் முக்கியத்தர் எழிலனின் மனைவி ஆனந்தி ஆகியோருக்கும் இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten