தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

சுயமரியாதையுடன், தலைநிமிர்ந்து வாழவேண்டுமென்றால் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களியுங்கள்!- அஸாத்சாலி

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 3ம்,4ம் வருட மாணவர்கள் வளாகத்தினுள்ளே புக நிர்வாகம் தடை!- விடுதிகளை விட்டு வெளியேறவும் உத்தரவு
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 03:51.28 PM GMT ]
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே கலைப்பீட 3ம் வருட மாணவர்கள், 4ம் வருட மாணவர்கள் உள்பிரவேசிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடை வித்துள்ளது.
இன்று பல்கலைக்கழகத்தில் இரண்டு பிரிவுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்தே இதனை யாழ்.பல்கலைக்கழக பதிவாளர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இன்று மதியில் 12 மணி முதல் 24 மணி நேரத்திற்குள்ளாக இரண்டு வருடங்களைச் சேர்ந்த மாணவர்களும் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டள்ளது.
மேலும் மறு அறிவுறுத்தல்கள் வரும் வரையில் இவர்கள் எவரும் பல்கலைக்கழக எல்லைக்களுக்குள்ளாக செல்லக் கூடாது என்றும் அதனை மீறி நடந்தால் பல்கலைக்கழக அனுமதி ரத்துச் செய்யப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

சுயமரியாதையுடன், தலைநிமிர்ந்து வாழவேண்டுமென்றால் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களியுங்கள்!- அஸாத்சாலி
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 04:01.39 PM GMT ]
வடக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் மக்கள் சுயமரியாதையுடன், தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்றால் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கொழும்பு மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அஸாத்சாலி மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
குறித்த சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
கொழும்பு மாவட்டத்திலிருந்து ஒருவர் யாழ். மாவட்டத்திற்கு வந்து ஒருவர் வீட்டில் தங்கினால் உடனே அந்த வீட்டிற்கு இராணுவ புலனாய்வாளர்கள் வந்து விடுகின்றார்கள்.
இதுதான் வடக்கில் இன்று இருக்கும் நிலை, நாங்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக மாவட்டச் செயலகத்திற்குச் சென்றிருந்தோம். உள்ளே 4பேர் மட்டுமே செல்ல முடியும் என்றார்கள். ஆனால் அரசாங்க தரப்பினர் 50 தொடக்கம் 100 பேர் உள்ளே போகிறார்கள்.
இங்கே என்ன நியாயம் இருக்கின்றது? இந்த அரசாங்த்தின் மூலம் தமிழர்களுக்கு ஒருபோதும் சுதந்திரமான வாழ்வு கிடைக்கப் போவதில்லை. மக்கள் நடமாட முடியாது? சுதந்திரமாக பேச முடியாது.
இதுவே வடக்கின் இன்றைய நிலை.
இந்நிலையில் வடக்கில் தேர்தலை அரசாங்கம் விரும்பி வழங்கவில்லை. அழுத்தங்களின் மத்தியிலேயே வழங்கியிருக்கின்றது.
எனவே மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கோ அல்லது ஜ.தே.கட்சிக்கோ வாக்களியுங்கள்.
ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தை வடக்கு தமிழ்பேசும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். என கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten