தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

கொழும்பு கூட்டுறவு அமைச்சின் அலுவலகத்தில் பாரிய தீ: சந்திரிகா ஆட்சிக் கால ஆவணங்கள் நாசம்?

முல்லை. குமிழமுனையில் மீண்டும் காடழிப்பு! முஸ்லிம் குடியேற்றம்!- தமிழ் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 04:27.22 PM GMT ]
முல்லைத்தீவு – முள்ளியவளை கிராமத்தில் காடழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கை முடக்கப்பட்டதன் பின்னர் குமிழமுனை கிராமத்தையொட்டிய பகுதியில் 30 ஏக்கர் காட்டை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆதரவாளர்களால் இந்த காடழிப்பும், குடியேற்றமும் நடத்தப்படுவதகவும், அவரின் ஆதரவாளர்களான ஜக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் ஜெனோபன், மற்றும் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனை ஏ.ஓ ஜவாஸ், மற்றும் அமைச்சரின் அமைப்பாளர் சீராஸ் ஆகியோரே இந்தக் காடழிப்பு நடவடிக்கையினை நேரடியாக பலத்த பாதுகாப்புடன் கன ரக வாகனங்கள் மூலம் கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து குமிழமுனை கிராம அபிவிருத்திச் சங்கம், மற்றும் முல்லைத்தீவு மாவட்ட டபிள்யூ.ஆர்.டி.எஸ் ஆகியனவும் மாவட்டச் செயலரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் குற்றம்சாட்டியிருப்பதுடன், இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கூட்டுறவு அமைச்சின் அலுவலகத்தில் பாரிய தீ: சந்திரிகா ஆட்சிக் கால ஆவணங்கள் நாசம்?
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 10:12.07 PM GMT ]
கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சின் 7 வது மாடியில் இன்று திடீரென பற்றிய தீயினால் அமைச்சின் ஊடகப்பிரிவு முற்றாக தீக்கிரையாகியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்தன தெரிவித்தார்.
பொலிஸார் தீயணைப்பு படையினரின் ஒத்துழைப்புடன் குறுகிய நேரத்திற்குள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படாத போதிலும் உடமைகள் நாசமாகியிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.
சேதமாகிய சொத்துக்களின் விபரம் இதுவரை கணிப்பிடப்படவில்லை. தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஊடகப் பிரிவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அலுவலகம் என்பன தீக்கிரையாகியுள்ள போதும் முக்கியமான ஆவணங்கள் பாதுகாப்பான முறையில் கையிருப்பிலிருப்பதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஹிராஜ் பெர்னாண்டோவை  அவர் கூறினார்.
இத் தீ விபத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ரவி கருணாநாயக்க எம்.பி. ஆகியோரது காலத்தில் கூட்டுறவுத் துறையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலான முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்பது முற்றிலும் பொய்யான தகவல் ஆகும். இது குறித்த ஆவணங்கள் ஆவணப்பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
ஊடகப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த நுட்பம் வாய்ந்த கெமரா, வீடியோ பதிவுகள் என்பன எரிந்து சாம்பலாகியுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten