தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 augustus 2013

இராணுவத்தின் தாக்குதல் தமிழர்கள் மீது எவ்வாறு இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது: வெலிவேரிய மக்கள் கவலை

வடக்கில் 90 வீதமான மாணவர்கள் சுகாதாரத்தில் மந்தகதி
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 11:55.18 AM GMT ]
வடமாகாணத்தில் தொண்ணூறு வீதமான மாணவர்கள் சுகாதாரத்தில் மந்த கதியில் உள்ளனர் என கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸ்ஸநாக்க தெரிவித்துள்ளார்.
தேக ஆரோக்கியம் மிக்க சந்தியினருக்கான வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
போசாக்கும் தேக ஆரோக்கிய வாழ்வும் என்ற திட்டத்தை வடமாகாணத்தில் முதன்முறையாக கல்விச் சேவைகள் அமைச்சராகிய நான் ஆரம்பித்து வைக்கின்றேன் எனத்தெரிவித்த கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸ்ஸநாக்க, சுகாதாரத்தில் மந்த கதியிலுள்ள மாணவர்களின் சுகாதார நலன்கருதி இத்திட்டத்தை வடமாகாணத்தில் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இன்று இந்த நாட்டில் அனைத்து மக்களும் இனபேதமின்றி வாழ்ந்து வருகின்றனர் எனவும், 1970 ஆம் ஆண்டு கால வரலாற்றினை புரட்டிப் பார்ப்பதற்கு நாம் விரும்பவில்லை எனவும் தெரிவித்ததுடன், அது பாரிய இன்னல்களையும், சவால்களையும் கொண்டதாக காணப்பட்டிருந்தாக தெரிவித்துள்ளார்.
இதனால் நாம் இனி பழையவற்றைச் சிந்திக்காது புதிதாக சிந்திப்போம், செயற்படுவோம், அத்துடன் வடக்கிலும் தெற்கிலும் சரி தமது பிள்ளைகளை பெற்றோர்கள் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கவே விரும்புவதாகவும் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸ்ஸநாக்க மேலும் குறிப்பிட்டார்.

இராணுவத்தின் தாக்குதல் தமிழர்கள் மீது எவ்வாறு இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது: வெலிவேரிய மக்கள் கவலை
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 01:18.49 PM GMT ]
குடிநீரில் இரசாயன விஷம் கலந்துள்ளமைக்கு எதிராகவும் சுத்தமான குடிநீரை வழங்குமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்திய தென்பகுதி மக்களை கொலை செய்த இலங்கை இராணுவம், வடக்கில் நடந்த போரின் போது தமிழர்கள் மீது எந்தளவுக்கு கடுமையாக செயற்பட்டிருக்கும் என்பதை தம்மால் உணர முடிந்ததாக வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
17வயதான இளைஞரை கொலை செய்து மேலும் 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்படுத்தி, நேற்று இராணுவம் நடத்திய தாக்குதலை, �மிலேச்சத்தனமான, கொடூரமான தாக்குதல் �என்று இந்த மக்கள் வர்ணித்தனர்.
�மிலேச்சத்தனமாக, கொடூரமான முறையில் எமது பிள்ளைகளை கொலை செய்தனர் �என அந்த மக்கள் கூறினர்.
முழு உலகமும் மதிக்கும் சர்வதேச போர் சட்டத்தின் பிரகாரம் பாடசாலை, வைத்தியசாலை, மத வழிப்பாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது.
எனினும் இராணுவம் பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியது என வெலிவேரிய ரத்துபஸ்வல மக்கள் குற்றம் சுமத்தினர்.

Geen opmerkingen:

Een reactie posten