உரிமைக்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது ஜனநாயக ஆட்சியின் அடையாளமல்ல: சுதந்திர ஊடக அமைப்பு
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 10:44.05 AM GMT ]
மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான சுத்தமான குடிநீரை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்து, படுகாயம் ஏற்படுத்துவது இராணுவ ஆட்சி ஒன்றின் அடையாளமேயன்றி, ஜனநாயக ஆட்சியின் அடையாளம் அல்லவென சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.
வெலிவேரிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு இதனை கூறியுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீரில் ஏற்பட்டுள்ள அசுத்தம் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி பிரதேச மக்கள் மற்றும் அது பற்றிய செய்திகளை சேரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை சுதந்திர ஊடக அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.
இந்த தாக்குதலானது இலங்கையின் மக்கள் சமூகத்தை இராணுவமயப்படுத்தும் நடவடிக்கையின் மற்றுமொரு அருவருக்கதக்க உதாரணமாகும்.
பொல்லுகளால் தாக்கியமை மற்றும் துப்பாக்கி பிரயோகம் காரணமாக இதுவரை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன் இந்த மனித வேட்டையை ஆரம்பிக்கும் முன்னர் செய்தி சேகரித்து கொண்டிருந்த ஊடகவியலாளர் விரட்டப்பட்டுள்ளனர்.
சில ஊடகவியலாளர்களை தாக்கி அவர்களின் ஒளிப்பதிவு கருதிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர், இராணுவம் சுற்றிவளைத்திருந்த வெலிவேரிய பிரதேசத்தில் இருந்து இரவு இராணுவம் வெளியேறும் வரை அந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்துள்ளார்.
கொழும்பு - கண்டி வீதியில் ஒருதொட்ட சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை முதலில் தாக்கிய இராணுவம் அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளது. பெலும்மாற சந்தியில் இரண்டாவது தாக்குதலை நடத்தியுள்ளது.
ஒருதொட்ட பிரதேசத்தில் வீடொன்றின் கூரை மீது ஏறி சம்பவத்தை படம்பிடித்து கொண்டிருந்த பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளரை தாக்கிய இராணுவத்தினர் அவரது ஒளிப்பதிவு கருவிகளை சேதப்படுத்தியுள்ளனர்.
இறுதியில் ஆறு நாட்களாக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட வெலிவேரிய சந்திக்கு சென்ற இராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தை உயரமான இடம் ஒன்றில் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர் தாக்கிய இராணுவத்தினர் செய்தியை சேரிக்க முடியாதபடி வீடொன்றில் அடைத்துள்ளனர்.
உரிமைகளை கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதும், அது பற்றி செய்திகளை சேகரித்து மக்களுக்கு தெரியப்படுத்துவதும் ஜனநாயக உரிமையாகும். அதனை அடக்குமுறைகளினால் தடுத்து நிறுத்துவது ஜனநாயக ஆட்சியின் அடையாளங்கள் அல்ல எனவும் சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு ஊடகவியலாளர்களும் அவர்களின் நிறுவனங்களுமே பொறுப்பு- அரசாங்க செய்தி பணிப்பாளர்
வெலிவேரிய ரத்துபஸ்வல சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அந்த ஊடகவியலாளர்களும் அவர்கள் சார்ந்த ஊடக நிறுவனமும் பொறுப்புக் கூறவேண்டும் என்று அரசாங்கத்தின் செய்தி பணிப்பாளர் கலாநிதி ஆரியரத்ன எத்துகல தெரிவித்தார்.
மாத்தளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில், ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் இப்படியான அசௌகரியங்களை எதிர்நோக்கும் போது, அவர்கள் பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் அல்லவா என செய்தியாளர் ஒருவர் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நானும் அதிகாரி என்ற வகையில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளேன். எனக்கு மீண்டும் பல்கலைக்கழக தொழிலுக்கு சென்று விடுவோமா என்ற எண்ணம் ஏற்படுகிறது என்றார்.
இங்கு கருத்து வெளியிட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்மிக்க திஸாநாயக்க, ரத்துபஸ்வ சம்பவம் தன்னை கடும் கவலையில் ஆழ்த்தியதாக கூறினார்.
முள்ளிவாய்க்காலில் மக்களை சுட்ட ஞாபகத்தில் வெலிவேரியாவிலும் மக்களை சுட்டுவிட்டனர்!- ஐதேக
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 09:20.13 AM GMT ]
இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஞாபகத்தில் இராணுவத்தினர் வெலிவேரியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ருவான் விஜயரட்ன ஆகியோர் இன்று முற்பகல் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உரையாடினர்.
காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பொதுமக்களையும் பார்வையிட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் வீட்டுக்கும் ரணில் விக்கிரமசிங்க குழுவினர் சென்று ஆறுதல் கூறினர்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் வீட்டுக்கும் ரணில் விக்கிரமசிங்க குழுவினர் சென்று ஆறுதல் கூறினர்.
அங்கு நின்ற மக்களை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க குழவினர் வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் செயற்பட்ட முறையை நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது காண முடிந்தது என்று கூறினர்.
இராணுவத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்துவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குழுவினர் வலியுறுத்தினார்.
Geen opmerkingen:
Een reactie posten