[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 01:40.59 PM GMT ]
பிடரத்மலை மேல் மற்றும் கீழ்ப் பிரிவுகளைச் சேர்ந்த சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது.
பிடரத்மலை மேல்பீரிவைச் சேர்ந்த சதுர்குமார் என்ற ஒன்றரை வயது சிறுவன் வீட்டுக் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளான். சிறுவனைக் காணவில்லை என்ற பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடி பின்னர் சிறுவனின் சடலம் கிணற்றில் மிதப்பதனைக் கண்டனர். இந்தத் தகவலை உறவினர்களுக்கு அறிவித்தனர்.
பிடரத்மலை கீழ்ப் பிரிவைச் சேர்ந்த சதுர்ஜன் என்ற இரண்டு வயது சிறுவனின் பெற்றோருக்கும் இந்தத் தகவல் அறிவிக்கப்பட்டது. பதற்றமடைந்த பெற்றோரால் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் சதுர்ஜன், கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.
அரை மணித்தியால இடைவெளியில் இரண்டு உறவினச் சிறுவர்களும் இவ்வாறு இரண்டு கிணறுகளுக்கு பலியாகியுள்ளனர்.
பெற்றோரின் கவனயீனமும் பதற்றமும் இந்த சிறுவர்களின் உயிர்களைக் காவுகொண்டுள்ளது.
வத்தளை பமுணுகம பிரதேசத்தில் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு
வத்தளை பமுணுகம பிம்பதுர பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நிர்வாணமான நிலையில் இனங்காணப்படாத நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
5அடி உயரம் கொண்ட இந்த சடலத்திற்குரியவர் சுமார் 50 வயது மதிக்க தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை நீதவான், நீதவான் விசாரணைகளை நடத்திய பின்னர், சடலம் ராகம வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டமைப்பினர் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்?
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 01:26.25 PM GMT ]
சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கூட்டமைப்பின் கனேடிய கிளை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று கனடா புறப்பட்டுச் சென்றனர்.
கனடாவில் சில தினங்கள் தங்கியிருக்கும் அவர்கள் எதிர்வரும் 12ம் திகதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.
இதன் போது அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்கும் திட்டமிருப்பதாகவும், இதில் வடக்கு மாகாண சபை தேர்தல் விடயங்கள் மற்றும் தற்போதை சூழ்நிலைகள் தொடர்பில் ஆராயப்படும் என தெரியவருகிறது.
Geen opmerkingen:
Een reactie posten