தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 augustus 2013

மாடறுப்பதை தடை செய்யும் அரசாங்கம் மக்களை அழிவுக்குட்படுத்த முயற்சி: அசாத் சாலி


யாழ். கிளிநொச்சியில் வியட்னாம் வழங்கும் கடல் வாழ் உயிரின வளர்ப்பு பயிற்சி
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 12:42.18 PM GMT ]
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மூன்று புதிய கடல் நீர் வாழ் உயிரினங்களை வளர்ப்பதற்கான பண்ணைகளை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அமைப்பதற்கும், அவற்றை வளர்ப்பதற்கான பயிற்சியை வழங்க வியட்னாம் அரசு முன்வந்துள்ளதாக இலங்கைக்கான வியட்னாமிய தூதுவர் ரென் சின் தசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 11.00 மணிக்கு யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த வியட்னாம் தூதுவர்,
2009 ஆண்டு அரச சுற்றுப் பயணமாக வியட்னாம் வந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கைக்கு அரச சுற்றுப் பயணமாக வந்த வியட்னாம் அரச தலைவருக்கும் இலங்கை அரச தலைவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பினை தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கிடையிலான வர்த்தக துறையை மேம்படுத்துவதற்கான பல திட்டங்கள் கைச்சாத்திடப்பட்டதாக குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வியட்னாமில் பரந்து விரிந்து இருக்கும் பயன்தரு கடல் வாழ் உயிரின வளர்ப்புத் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டதுடன், பயிற்சி பெற்றவர்களை கொண்டு உடனடியாகவே இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு வியட்னாம் அரசு முடிவு செய்ததாக குறிப்பிட்ட அவர், அதற்குரிய இடங்களை பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த கடல் நீர்வாழ் உயிரினங்களை வளர்ப்பதற்காக இலங்கையின் சகல மாவட்டங்களிலு தமது அதிகாரிகளுடன் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்ட போதும் இதற்கு சரியான காலநிலை, சூழல் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் வேலணைப் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் கிராஞ்சி மற்றும் வலைப்பாடு பிரதேசங்களில் முதல்கட்டமாக கடல் வாழ் உயிரினங்களை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், கிளிநொச்சி வேரவில பிரதேசத்திலும் பண்ணை அமைப்பதற்கான பரிசோதனைகள் இடம் பெறுவதாக குறிப்பிட்டார்.
இந்த கடல் நீர் வாழ் உயிரின வளர்ப்பின் முதல்கட்டமாக கடல் பாசி மற்றும் சிங்கி இறால் போன்ற வற்றை வளர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் தற்போது நாளுக்கு நாள் மாறி வரும் சூழல் மாற்றம் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் அழிவடைந்து வருவதாகவும் இதனால் மீன்பிடியில் ஈடுபடும் பலர் தமது மீன்பிடித் தொழிலை விட்டு விட்டு மாற்று தொழில்களில் ஈடுபடுவதாகவும் என இவ்வாறு மாற்று தொழில் ஒன்றுக்கு சென்று கஸ்டத்தை அனுபவிக்காது இருக்க இது உதவும் எனக் குறிப்பிட்டார்.
குறிப்பாக கடல் வாழ் உயிரினமான சிங்கி இறால்களை உற்பத்தி செய்து விற்பனை மேற்கொள்ளும் போது நீங்கள் விற்பனை செய்யும் போது வரும் வருமானத்தின் 30 சதவீதத்தையே இதற்கு செலவிட வேண்டி ஏற்படும் எனக் குறிப்பிட்டார்.
இந்த பயிற்சியை யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய நீர் உயிர் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பிராந்திய உத்தியோகத்தர்களான பாலச்சந்திரன் நிருபராய் மற்றும் சல்வண்டி மேரியர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மாடறுப்பதை தடை செய்யும் அரசாங்கம் மக்களை அழிவுக்குட்படுத்த முயற்சி: அசாத் சாலி
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 01:09.58 PM GMT ]
மக்களை அழிவுக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க சட்டமூலங்களை உருவாக்க முயற்சித்து வரும் அரசாங்கம், மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதை தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது என தமிழ் முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் மக்களை அழிவுக்கு உட்படுத்தும் கசினோ நிலையங்கள், மதுபான நிலையங்கள் போன்ற சட்டவிரோதமான செயற்பாடுகளை நாட்டில் ஸ்தாபிப்பதற்காக சட்ட மூலங்களை தயார் செய்து வருகிறது.
முஸ்லிம் மக்கள் உணவுக்காக மாடுளை கொல்வதாக கூறி, இந்த சட்டமூலத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும் சிங்கள மக்களின் 70 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மாட்டிறைச்சியை உணவுக்காக எடுத்து கொள்கின்றனர்.
நாட்டில் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தால் நாட்டிற்கு அதன் மூலம் பாரிய சேதம் ஏற்படும். எனினும் மாடுகள் அறுக்கப்படுவதை தடுப்பது சிறந்த நடவடிக்கையாகும்.
துரதிஷ்டவசமான நிலைமை என்னவென்றால், மாடுகளை அறுப்பதை தடுக்க சட்டத்தை கொண்டு வரும் தரப்பினரே, நாட்டு மக்களை அழிவுக்கு கொண்டு செல்லும் சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கின்றனர். எனினும் அதற்கு எதிராக எவரும் பேசுவதில்லை என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten