தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

தெற்கில் அரங்கேறிய இராணுவ அடக்கு முறை! ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களை துரத்தித் துரத்தி தாக்கிய இராணுவத்தினர்!

சில அரசியல்வாதிகள் நடவடிக்கைகள் அவர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது: ஜனக பண்டார தென்னகோன்
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 01:53.39 PM GMT ]
சில அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை பார்க்கும் போது அவர்கள் பாடாலைகளுக்கு சென்றதில்லேயோ என்று எண்ண தோன்றுவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
தம்புள்ளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் மண்டியிட்டிருக்கும் ஆசிரியர்களை எழுப்புப் போது, சிலர் சென்று மீண்டும் அந்த ஆசிரியர்களை மண்டியிட வைக்கின்றனர்.
சிலர் தமது கட்சியை சேர்ந்தவர்கள் மீதே தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை எனது மகனை ரவுடியாக சித்தரித்து, அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
நான் பிள்ளைகளை சிறந்த முறையில் வளர்த்துள்ளேன் என்பதை உலகத்திற்கு அச்சமின்றி கூறுகின்றேன் என்றார்.
அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனின் மகன் எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அண்மையில் தம்புள்ளை பிரதேசத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த மற்றுமொரு வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

தெற்கில் அரங்கேறிய இராணுவ அடக்கு முறை! ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களை துரத்தித் துரத்தி தாக்கிய இராணுவத்தினர்
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 01:24.22 PM GMT ]
கம்பஹா மாவட்டம் ரத்துபஸ்வல பிரதேசத்தில் கிணற்று நீரில் விஷ இரசாயனம் கலந்துள்ளமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸாரும், இராணுவத்தினரும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
கொழும்பு கண்டி வீதியின் பெலும்மாற என்ற இடத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு கண்டி வீதிக்கு குறுக்காக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, இராணுவ ஜீப் வண்டியின் ஒன்றின் மேல் எறிய இராணுவ அதிகாரி ஒருவர், 5 நிமிடங்களுக்குள் வீதியை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார். அவ்வாறு கலைந்து செல்லவில்லை தாக்குதல் நடத்தப்படும் என கூறினார்.
ஊடகவியலாளர் புகைப்படமோ, வீடியோ படங்களையே எடுக்க கூடாது. மீறி எடுத்தால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என அந்த அதிகாரி எச்சரித்தார்.
அப்போது கூடியிருந்த மக்கள் “ஐயோ சார் அப்படி செய்ய வேண்டாம். நாங்கள் குடிப்பதற்கு தண்ணீரை தான் கேட்கிறோம். எமன்கு பெரிய பிரச்சினை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மீது பொல்லுகளால் சரமரியான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சிலர் அடியை வாங்கி கொண்டு சிதறி ஓடினர்.
சிலர் ஓடி ஒழிந்து கொள்ள இடம் தேடினர். பெண்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதனையடுத்து 5 நிமிடங்களில் வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து தடை நீங்கியது. சுமார் 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வீதியின் இருமருங்கிலும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
பாதுகாப்பு தேடி வீடுகளுக்குள் ஓடியவர்கள் தேடித் தேடி தாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை கொழும்பு - கண்டி வீதியின் பெலும்மாற சந்தியில் பிரதேச வாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துக்கு தடையேற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறிகையில், பிரதேசவாசிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையேற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை அவர்கள், ஏற்காதால இராணுவத்தின் உதவியை நாட நேர்ந்தது என்றார்.
இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக இராணுவம் தலையிட நேர்ந்தது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
இந்த நிலையில், ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் ரத்துபஸ்வல பிரதேச மக்களில் சிலர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten