தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 15 augustus 2013

ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் இராணுவத்துடன் நீதவானும் செல்ல வேண்டும்: இலங்கைக்கு இம்மாதம் தலைவலியே!- ஜகத் ஜயசூரிய !

ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த இராணுவம் அனுப்பப்படும் போது, அவர்களுடன் நீதவான் ஒருவரும் செல்ல வேண்டும் என்று முப்படைத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து சட்ட விதிகளை காவற்துறையினரே அமுலாக்க வேண்டும். எனினும் அவர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே இராணுவம் வரவழைக்கப்படும். ஆனால் இராணுவத்துடன் நீதவான் ஒருவரும் செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதன் போது ஏன் வெலிவேரிய தாக்கதல் சம்பவத்தின் போது இராணுவத்துடன் நீதவான் அனுப்பி வைக்கப்படவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தற்போது பதில் வழங்க முடியாது என்றும், சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று அறிக்கை வெளியாதன் பின்னரே பதில் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு இந்த மாதம் தலைவலியான மாதமாகவே அமையும் - ஜகத் ஜயசூரிய
இந்த மாதம் இலங்கைக்கு தலைவலியான மாதமாக அமையும் என்று, முப்படைத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகையின் நிமித்தமே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதில் வழங்க இராணுவம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நவநீதம் பிள்ளை விரும்பும் இடங்களுக்க அழைத்துச் செல்லவும், அவருக்கான பாதுகாப்பினை வழங்கவும் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜகத் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten