சிங்கள பெண்களுக்கு கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு !
10 June, 2013 by admin
பேராதனை வைத்திய சாலையில் மகப்பேற்றுப் பிரிவில் அனுமதிக்கப்படும் சிங்கள பௌத்த பெண்களை கட்டாயப்படுத்தி குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்வதாகவும், அவர்களை கட்டாயப்படுத்தி குடும்பக் கட்டுப்பாட்டு மருந்துகளை அவர்கள் மீது திணிப்பதாகக் குற்றஞ்சாட்டியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மத்திய மாகாண சபை ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர் துஷார ஸ்வர்ணதிலக்க இது பற்றித் தெரிவிக்கையில், சிங்களப் பெண்கள் பலரிடமிருந்து தமக்கு இது சம்பந்தமாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டகாரர்களுடன் கலந்துரையாடிய பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சந்திரா குணதிலக்க இக் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக 48 மணித்தியாலத்திற்குள் விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதாகத் தெரிவித்தார். விசாரணையில் குறித்த வைத்தியர்களில் தவறு காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார அமைச்சின் செயலாளரின் கவனம் ஈர்க்கப்டுள்ளதாகவும் இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார். தமிழர்களை ஒரு கைபார்த்து, ஓரங்கட்டியுள்ள சிங்களவர்கள் தற்போது முஸ்லீம் சகோதரர்கள் மீதும் தமது அடக்குமுறைகளைப் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளார்கள். இது மிகவும் வெட்ட வெளிச்சமாக அரங்கேறி வருகிறது.
ஈழத் தமிழர்களை கடத்திய முக்கிய நபர் இவர் தான் !
10 June, 2013 by admin
இந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட, சத்தியா என்ற சக்திவேல் போலீஸ் கையில் சிக்காமல் தப்பி ஓடி விட்டார். அவரை கைது செய்ய கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக் கண்ணன், இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் சேவியர்தன்ராஜ் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள் செந்தில்குமரன், பாலசுப்பிரமணியன், கலிதீர்த்தான் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் களத்தில் இறக்கப்பட்டனர். தனிப்படை போலீசார் சத்தியாவை நேற்று(09) கைது செய்தனர். புதுக்கோட்டையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவர் சென்னை கொண்டுவரப்பட்டார். முன்னாள் பேரூராட்சி தலைவரான அவர், தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் ஆவார்.
மந்தாரக்குப்பத்தில் உள்ள இவரது வீட்டில்தான் இலங்கை தம்பதி அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இவரது கூட்டாளியான கலியமூர்த்தியும் கைது செய்யப்பட்டார் என அதிர்வு இணையம் அறிகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சியானது ஈழத் தமிழர்களுக்காக சில போராட்டங்களை நடத்தியுள்ளது. இன் நிலையில் இக் கட்சியின் முக்கிய பிரமுகரே ஈழத் தமிழர்கள் கடத்தலுக்கு உதவியாக இருந்திருக்கிறார் என்பது பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten