[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 02:59.45 AM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
அதிகார பகிர்வு, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தீர்வுகள் முன்வைக்கப்பட்டு, ஐக்கிய தேசிய கட்சியன் அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது
தாங்கள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இந்த யாப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த அரசியல் யாப்புக்கான யோசனை தற்போது ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாகவும், அதில் சேர்க்கப்பட வேண்டிய மற்றம் நீக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடுகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதிநிதிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை
[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 03:06.18 AM GMT ]
பாரதீய ஜனதா தளம், சிவ்சேனா, ஆர்.எஸ்.எஸ் போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
ஆளும் கட்சியின் ஆறு சிரேஸ்ட அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இந்திய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இது மூடிய கதவு பேச்சுவார்த்தையாக அமையும் என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், சுசில் பிரேமஜயந்த, தினேஸ் குணவர்தன, அனுர பிரியதர்சன யாபா ஆகிய முக்கிய அமைச்சர்கள் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க உள்ளனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர். சில்வா, புலனாய்வுப் பிரிவுத் தலைவர் ஹெந்தாவிதாரண, ரியர் அட்மிரால் ஜயந்த பெர்னாண்டோ, முன்னாள் சட்ட ஆலோசகர் ரொஹான் பெரேரா உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
13ம் திருத்தச் சட்டம், வடக்கு மாகாணசபைத் தேர்தல், அதிகாரப் பகிர்வு, போர் இடம்பெற்ற வலயங்களின் அபிவிருத்தி, மக்களின் புனர்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten