தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 juni 2013

சிறிலங்காவைப் புறக்கணிப்போம்: உலகளாவியரீதியிலான குறும் பரப்புரை படங்களுக்கான போட்டி அறிவிப்பு!

போலி கடனட்டைகளுடன் கைதான வடபகுதி சந்தேகநபர்கள் விளக்கமறியலில்..!
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 12:27.34 AM GMT ]
15 போலி கடனட்டைகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் வடபகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு, பிறிஸ்டல் வீதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சந்தேகநபர்கள் பின்னர் இரகசிய பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
சந்தேகநபர்கள் மேற்படி போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி மோசடி செய்த பணம் தொடர்பான விபரங்கள் ஆராயப்பட்டு வருவதாக இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறு பெறப்பட்ட பணம், பயங்கரவாத இயக்கங்களுக்கு அனுப்பப்பட்டதா எனவும் தாம் ஆராய்ந்து வருவதாக இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.
சிறிலங்காவைப் புறக்கணிப்போம்: உலகளாவியரீதியிலான குறும் பரப்புரை படங்களுக்கான போட்டி அறிவிப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 08:45.03 PM GMT ]
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் "SAY NO TO SRI LANKA" செயல்மையம் சிறிலங்காவைப் புறக்கணிப்போம் எனும் கருப்பொருளிலான குறும் பரப்புரை படங்களுக்கான போட்டி ஒன்றினை அறிவித்துள்ளது.
அரசியல், வர்த்தகம், பொளாதாரம், உல்லாசம் என பல்வேறு துறைகளிலும் சிறிலங்காவினை புறக்கணிக்கும் மையக்கருவினை கொண்டதான படைப்புக்களுக்கான அழைப்பாக இது அமைந்துள்ளது.

புலம்பெயர் தேசங்களில் வளர்ந்து வரும் இளம் தமிழ்கலைஞர்கள் தங்கள் கவனத்தினை குறும்படங்கள் மீது செலுத்தி வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளிவந்துள்ளது.

உலகத் தமிழ்படைப்பாளிகளுக்கான அழைப்பாக விடுக்கப்பட்டுள்ள இப்போட்டியில் பங்கெடுக்கும் சிறந்த படைப்புக்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்பட இருப்பதோடு, ஒவ்வொரு படைப்பும் விழிப்பினை ஏற்படுத்தட்டும் என அறைகூவல்விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக அரங்கில் சிறிலங்காவினை தனிமைப்படுத்தவும், அம்பலப்படுத்தவும் அமையும் சிறிலங்கா புறக்கணிப்பு போராட்ட வடிவமானது சிறிலங்காவுக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தவல்லது.

ஒவ்வொரு குறும் பரப்புரை படைப்புக்களுக்கான கால அளவாக 7 நிமிடம் வரை அமைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, போட்டியில் பங்கெடுப்பதற்கான முற்பதிவினை எதிர்வரும் 31/08/2013 க்கு முன்னர் info@saynotosrilanka.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசு அறிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten