[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 05:35.58 AM GMT ]
கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் 32 சீசி ரீவி கமராக்கள் இருக்கின்ற போதும் அவற்றில் நான்கில் மட்டுமே தீ விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
இவற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தெளிவான முறையில் காட்சிகள் பதிவாகவில்லை என குற்றத்தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி இரவு கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பில் மின்சார தொழிநுட்பவியலாளர்கள் சாட்சி கூறியுள்ளனர்.
தீ பரவிய நேரம் நள்ளிரவு 12.36 என தெரிவிக்கப்பட்ட போதும் மின்சார தொழிநுட்பவியலாளர்கள் அதிகாலை 1.02 மணியளவிலெயே தீ பரவியதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தீ விபத்திற்கான காரணம் குழு ஒன்றோ அல்லது தனி ஒருவரது சதியாகவோ இருக்க கூடும் என பொலிஸார் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வாக்காளர் பதிவு தொடர்பான திருத்தச் சட்டம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 02:48.00 AM GMT ]
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில். வாக்காளர் பெயர் பட்டியலில் இணைந்துக் கொள்ள முடியாதவர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பளிக்கும் வகையிலான ஒழுங்குவிதி சட்டமூலம் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அவசர சட்ட மூலமாக இந்த சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருப்பதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த பிரேரணை தொடர்பில் பொது இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், எதிர்கட்சிகளுக்கும் இது தொடர்பில் விளக்கப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலத்தில் மூலம், வடமாகாணத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten