தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 juni 2013

கனடா மற்றும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பதில்!


கொள்ளுப்பிட்டி ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலயத்தை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோத்தபாய உத்தரவு
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 03:28.37 AM GMT ]
கொழும்பு, கொள்ளுப்பிட்டி தர்மாலோக மாவத்தையின் முடிவில், அலரி மாளிகைக்குப் பின்புறமாக உள்ள 80வருட கால பழமை வாய்ந்த ஸ்ரீ பூமாரி அம்மன் கோவிலை வேறு இடத்துக்கு மாற்றுமாறு
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
1920களில் இந்தப் பகுதியில், கொழும்பு மாநகரசபையினால், கொள்ளுப்பிட்டி பௌத்த விகாரைக்குப் பின்பாக, குடியமர்த்தப்பட்ட சலவைத் தொழிலாளர் சமூகத்தினரின் வழிபாட்டுக்காக 1930களில், இந்தக் கோவில் அமைக்கப்பட்டது.
மூன்று தல விருட்சங்களைக் கொண்டு 80 ஆண்டுகளாக இயங்கும் இந்தக் கோவில் கொள்ளுப்பிட்டிப் பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. பல இடங்களில் இருந்து பக்தர்கள் இங்கு வழிபாட்டுக்காக வருகின்றனர்.
இந்தநிலையிலேயே கொழும்பு மாநகரசபை இந்தக் கோவிலை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபையே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளது.
இந்தக் கோவில் அமைந்துள்ள இடத்தில் கொழும்பு மாநகரசபை வாகனத் தரிப்பிடம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இந்தக் கோவிலை அமைக்க வழங்கப்பட்டுள்ள மாற்று இடம் நவம் மாவத்தையில் அமைந்துள்ளது.
இது சலவையகப் பகுதி என்றும் அது கோவில் அமைப்பதற்குப் பொருத்தமான இடம் இல்லை என்றும கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் ருக்சன் பெரேரா தெரிவித்துள்ளார்.
கனடா மற்றும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பதில்!
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 03:29.45 AM GMT ]
அமெரிக்காவும், கனடாவும் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 22ம் பொது அமர்வில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, இலங்கையின் பிரதிநிதிகள் பதில் வழங்கியுள்ளனர்.
இலங்கையில் இன்னும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெறுவதுடன், இது தொடர்பில் விசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று அமெரிக்காவின் ஐக்கிய நாடுகிளின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதி தெரிவித்திருந்தார்.
அத்துடன் இலங்கையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்று, கனடாவின் பிரதிநிதி குற்றம் சுமத்தி இருந்தார்.
இதற்கு பதில் வழங்கியுள்ள இலங்கையின் பிரநிதிகள், இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகளே ஆகின்றன.
ஆயினும் இந்த காலகட்டத்துக்குள் குறிப்பிடத்தக்க அளவு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten