தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 juni 2013

மனித உரிமைகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு விளக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்


13வது அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்: இந்தியா உறுதி
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 05:41.51 AM GMT ]
13வது அரசமைப்புத் திருத்தத்தின் அனைத்து அம்சங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் இந்தியா மிக உறுதியாகவும், தெளிவாகவும் இருப்பதாக இந்தியாவின் திட்டக்குழு மற்றும் பாராளுமன்ற விவகார மத்திய இணை அமைச்சர் வீ.நாராயணசாமி தெரிவித்துள்ளார். 
இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாக வீ.நாராயணசாமி கூறினார்.
அமைச்சர் தொண்டமான் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி ஆகியோருக்கு இடையில் அண்மையில் நடந்த சந்திப்பில் வீ.நாராயணசாமியும் கலந்து கொண்டிருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாராயணசாமி,
13ஆவது அரசமைப்புத் திருத்தத்திலுள்ள முழுமையான அம்சங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.
அதில் இந்தியா உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறது என்பதை நாங்கள் சொல்லியிருக்கிறோம் என்றார் நாராயணசாமி.
எங்களைப் பொறுத்தவரை 13 ஆவது திருத்தத்திலுள்ள அனைத்து அம்சங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட்டு தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான்.
தலைவி சோனியாவும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளார். இதனை நாங்கள் தெளிவாக சொல்லியிருக்கிறோம் என்று மேலும் தெரிவித்தார்.

மனித உரிமைகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு விளக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 05:55.16 AM GMT ]
மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் வட மாகாணத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு தரப்பினரை தெளிவுபடுத்தும் செயற்றிட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் கடமையாற்றும் பாதுகாப்பு பிரிவினர் தெளிவுபடுத்தப்படவுள்ளனர்.
அரச பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை குறைப்பது இத் திட்டத்தின் நோக்கமாகும்.

Geen opmerkingen:

Een reactie posten