தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 juni 2013

மொரட்டுவையில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்

வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவின் அழைப்பாணையை பொலிஸார் புறக்கணிப்பு
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 10:36.22 AM GMT ]
கடந்த மார்ச் மாதம் 5ம் திகதி காணாமற் போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் உறுப்பினர்கள் கொழும்புக்கு பயணித்த 10 பேருந்துகளை தடுத்து நிறுத்தியமை தொடர்பான விசாரணைகளுக்கு வவுனியா மனித உரிமை ஆணைக்குழு பொலிஸாருக்கு அழைப்பாணை விடுத்த போதிலும் பொலிஸார் சமுகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 05.03.2013 அன்று காணாமற் போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் உறுப்பினர்கள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து சுமார் 700 பேர் கொழும்பு நோக்கி ஐக்கிய நாடுகள் சபையிடம் தங்கள் உறவுகளை தேடித் தருமாறு மனு ஒன்றைச் சமாப்பிக்கச் செல்ல முயன்ற போது அவர்கள் பிரயாணம் செய்த 10 பேரூந்துகளைத் தடுத்து பிரயாணிகள் செல்ல அனுமதி மறுத்தமைக்கு எதிராக கொழும்பு மனித உரிமை ஆணைக்குழுவுக்கு மனுச் செய்யப்பட்டிருந்தது.
இதனை விசாரிப்பதற்காக விசாரணையொன்றுக்கு வருமாறு வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் காணாமற் போனோரின் உறவுகள் சங்கத்தின் தலைவர், செயலாளர்களான மனுவல் உதயச்சந்திரா, தனபாலசிங்கம் புஸ்பாம்பாள் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தது.
இதற்கமைய தலைவர் மன்னாரில் இருந்தும் செயலாளர் முல்லைத்தீவிலிருந்தும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர், அருட்தந்தை செபமாலை, செயலாளர் பே. பி.சிந்தாத்துரை ஆகியோருடன் வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் சமூகமளித்த  போதிலும், வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் சமுகமளிக்கவில்லை.
இதனால் இவ்விசாரணை நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவையில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 11:04.24 AM GMT ]
கொழும்பின் புறநகர் மொரட்டுவ அங்குலான பகுதியில் நேற்று இரவு கிறிஸ்தவ ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இனந்தெரியாத குழுவினர் குறித்த ஆலயம் மீது தாக்குதல் நடத்தியதுடன் தீயிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இரண்டு சிலைகளும் தேவாலய சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த சம்பவத்தின்போது எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டதாக தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை.
அமெரிக்க ராஜாங்க திணைக்களம், இலங்கையில் மதத்தலங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்ட சில தினங்களிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten