தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 juni 2013

மாகாணங்கள் இணைவதை ரத்து செய்யும் இலங்கை அரசின் யோசனை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து

காதலியைக் கொலைசெய்து கல்லில் கட்டி கிணற்றில் போட்ட காதலனும் நண்பனும் கைது
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 09:02.38 PM GMT ]
முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றுக்குள் இருந்து கல்லுடன் கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்துள்ள பெண் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த துரைசாமி சரோஜா (25) என பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சரோஜாவை காதலித்துத் திருமணம் செய்வதாக உறுதியளித்திருந்தவரெனவும் பொலிஸ் பேச்சாளர் புத்திக்க சிறிவர்தன கூறினார்.
மே மாதம் 24ஆம் திகதியன்று, மாங்குளம் பனித்தம்குளம் பிரதேசத்திலுள்ள கிணற்றுக்குள்ளிருந்து இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் கல்லொன்றுடன் சேர்ந்து கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. சடலத்தை உறவினர்கள் இனங்கண்டதற்கமைய அவர்களது வாக்குமூலங்கள் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது:-
மேற்படி யுவதியை காதலிப்பதாகக் கூறி வந்த இளைஞன் அவரையே திருமணம் முடிப்பதாக வாக்குறுதி வழங்கி குறித்த இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். யுவதி அங்கு சென்றதையடுத்து, தனது நண்பனுடன் வந்திருந்த காதலன் பாழடைந்த வீட்டுக்கு யுவதியை அழைத்துச் சென்ற பின் தனது நண்பனுடன் இணைந்து காதலியை வல்லுறவுப்படுத்த முயன்றுள்ளார்.
இதற்கு குறித்த யுவதி எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்தே இளைஞர்கள் இருவருமாக சேர்ந்து யுவதியை அடித்துக் கொலை செய்த பின்னர் சடலத்தை கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் போட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் அதேவேளை அவர்கள் நாளை முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மேற்படி யுவதி கொலை செய்யப்பட்டுள்ளமை மரண விசாரணைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மாகாணங்கள் இணைவதை ரத்து செய்யும் இலங்கை அரசின் யோசனை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 12:05.33 AM GMT ]
இலங்கை அரசு 13வது அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான சில பிரேரணைகளை விவாதித்து வருவதாக் கூறப்படும் நிலையில், இது குறித்து ஆளும் கூட்டணிக் கட்சிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய ஒரு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்ட்தாகத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில், இந்திய இலங்கை ஒப்பந்த்த்தை அடுத்து கொண்டு வரப்பட்ட 13வது அரசியல் சட்டத்திருத்தத்தின் படி, இரு மாகாணங்கள் தாமாக விரும்பி இணைந்துகொள்ள வகை செய்யும் பிரிவை ரத்து செய்ய ஒரு அரசியல் சட்டத்திருத்தத்தை ஆளும் தரப்பு முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆளும் ஐக்கிய முற்போக்கு சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளும் இதில் கலந்துகொண்டனர். தமிழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இது குறித்து தமிழோசையிடம் கூறியதாவது,
இந்தக் கூட்டத்தில் இந்த பிரேரணைகள் குறித்த விளக்கங்கள் மொழிபெயர்ப்பாக தமக்குக் கொடுக்கப்பட்டாலும், அதற்குரிய போதிய விளக்கங்கள் இல்லாததால், இது குறித்து தன்னால் உடனடியாக ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கமுடியவில்லை என்றார்.
ஆனால்  நாளை (இன்று) வியாழக்கிழமை இது குறித்த தீர்மானம் ஏதேனும் அமைச்சரவைக் கூட்டத்தில் வந்தால், அது குறித்து முழுமையாகப் பரிசீலித்து ஒரு முடிவை தன்னால் எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் தமிழர்கள் பிரச்சினைகளை அணுகுகின்ற போது, இனவாத நிலைப்பாட்டையோ அல்லது தொடர்ந்து சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையையோ தவிர்க்கவேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகும் இந்த நிலை தொடர்வது சரியல்ல என்றும் தான் இந்தக் கூட்டத்தில் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதிலளித்து பேசுகையில்,
உங்களை நாங்கள் நம்புகிறோம், அதனால்தான் உங்களை ( டக்ளஸை)  அமைச்சரவையில் வைத்திருக்கிறோம், ஆனால் தமிழர்களின் பிரச்சினை வேறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சினைகள் வேறு என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் 13வது சட்டத்திருத்தத்தின் கீழ் தரப்பட்ட அதிகாரங்களைவிட கூடுதல் அதிகாரங்கள் தரப்படவேண்டும் என்ற கோரிக்கை இருக்கும் நிலையில், இருக்கின்ற அதிகாரங்களையும் குறைப்பது என்று இலங்கை அரசு உத்தேசித்தால், அது குறித்து என்ன நிலைப்பாடு எடுப்பீர்கள் என்று கேட்ட்தற்கு பதிலளித்த டக்ளஸ்,
இது குறித்து ஆராய்ந்துதான் பதிலளிக்க வேண்டும், ஏனென்றால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்று அரசு கூறும் போது, அவசரப்பட்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. 

Geen opmerkingen:

Een reactie posten