[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 12:23.58 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் தனது 12 வயதான மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ். முனியப்பர் வீதி பகுதியைச் சேர்ந்த 40 வயதான நபரொருவர், தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, குறித்த நபரை யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
துஸ்பிரயோகத்திற்குட்பட்டதாக கூறப்படும் வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட நபரும் வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிசோதனையின் பின்னர் குறித்த நபரை குருநகர் சிறுவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.
இந்தியா தென்கிழக்காசிய வல்லரசு நிலையிலிருந்து கீழ் இறங்கியுள்ளதா?- சி.பாஸ்க்கரா
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 11:59.46 AM GMT ]
இந்திய மத்தியரசினர் இலங்கை மீதான போக்குகளை பார்க்கும் போது கையாலாகாத இந்தியாவின் நிலையும் இந்தியா, தென்கிழக்காசிய வல்லரசு நிலையில் இருந்து விலகி கையாலாகாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா என எண்ண தோன்றுகின்றது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.
தொடர்ந்து இந்திய மத்தியரசின் முன்னைய போக்குகளையும் தற்போதைய அரசியல் நகர்வுகளையும் பார்க்கும்போது பாரிய இடைவெளி தோற்றுவதை காணக் கூடியதாக உள்ளது.
மேலும் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சியில் தன்சொற்கேளாமல் இலங்கை போர்முனைப்பை காட்டியபோது விமானம் மூலம் உணவு பொட்டலம் போட்டு தன்னிலை காட்டியமை மற்றும் பிரதமர் வாஜ்பாஸ் காலத்தில் தமது கட்டுக்கோப்பில் இலங்கையை வைத்தமை தேவையான வேளை தட்டி கேட்டமை பிரதமர் ராஜிவ் காந்தி வேளையில் படையை அனுப்பியதுடன், பிரதமர் ராஜீவ்காந்தி ஜனாதிபதி து.சு. ஜெயவர்த்தனாவுடனான ஒப்பந்தம் செய்து நடைமுறைப்படுத்த முனைந்தமை காணக்கூடியதாக இருந்தது.
பிற்காலத்தில் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையுடன் இலங்கை அரசாங்கத்தின் யுத்த நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய இந்தியா இப்போது அரசியல் தீர்வுக்கும், 13வது திருத்தச் சட்டத்துக்கும் உரிய அழுத்தத்தை வழங்காமல் இருப்பது ஏன்? இந்தியாவின் கையாலாகாத செயலா?
இந்திய அரசின் பிரதமர் ராஜீவ் காந்தி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் சரத்தில் உள்ள வடகிழக்கு ஒரே மாநிலம் என்பதை மீறி இலங்கை வடக்கு, கிழக்கு தனிமாநிலம் என பிரித்தபோது இந்தியாவின் கையாலாகாத நிலையின் ஏறுபடி கிழக்கு தேர்தல் நடத்தும் போது தன்னிலையற்று இந்தியா இருந்தமை.
மேலும் தன்னால் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டம் ஒவ்வொன்றாக நீக்கும் போதும் மௌனமாக இருப்பதும் இலங்கை ஜனாதிபதி ஜக்கியநாடுகள் நாயகம் பான்கின்முன் இடம் 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாகத் தீர்வு எனவும் இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இந்தியா கிருஷ்ணாவிடம் தெரிவித்த 13வது சரத்து நீக்கப்படாது என்ற உறுதிமொழிக்கு மேலாக இலங்கையின் கைங்காரியங்களை இந்தியா வேடிக்கை பார்ப்பதை பார்க்கும் போது இயலாமையின் உச்சம் தெரிகிறது.
சீனா, இந்தியப் பிரதேச அருணாச்சத்தில் உடுருவிய படங்கள் தெட்டத்தெளிவாக ஊடகங்களில் வெளிவந்தபோதும் அப்படியொரு ஊடுருவலும் நடைபெறவில்லை என அமைச்சர் சிதம்பரம் சட்டசபையில் கூறிய கையாலாகாத வேலையே இலங்கைப் போக்கிலும் இந்தியா கடைப்பிடிக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது.
இதேவேளை, சீன உதவியுடன் யாழ். கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை அமைய வேண்டிய தேவை தற்போது வடபகுதி மக்களுக்கு இல்லை மீள்குடியேற்றம் புனருத்தாரனமே மக்களுக்குத் தேவை அப்படியிருந்தும் அதிவேக நெடுஞ்சாலை அமையுமாயின் இந்திய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும்.
இந்திய- இலங்கை கடல்தூரப் பயணம் வடபகுதியில் இருந்து மணித்தியாலத்திற்கு குறைவானதும், யாழ் கொழும்பு அதிவேக பாதையில் சில மணித்தியாலமாக மட்டுப்படுத்தப்படுவதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கிய அச்சுறுத்தல்களாகும்.
ஏனெனில் முக்கிய இந்தியாவின் இராணுவ அணுத்தளபாட தளங்கள் தமிழ் நாட்டை சுற்றியுள்ளதை பார்க்கையில் இந்தியாவில் அசாதாரண ஆபத்தான சூழ்நிலைகள் தீவிரவாதிகளால் இலகுவாக செயற்படுத்தப்பட முடியும். இதனை முறியடித்து இந்தியா தென்கிழக்காசிய வல்லரசு என்பதை தான் நிலைநாட்ட முனைகிறது என காட்டமுனையுமாயின் இந்தியா அர்த்த புஷ்ட்டியான கைங்காரியங்களை தமிழர்கள் சார்பாக இலங்கையில் இந்தியா எடுக்க வேண்டிய முக்கியமான காலமிது என பாஸ்க்கரா தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten