[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 02:14.48 PM GMT ]
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டில் இருந்துவந்த ஒருவர் 10 தினங்களில் இறந்தது தொடர்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டிப்பளை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சடலத்தினை தோண்டி மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமானவரின் உறவினர்களினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை 10ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 45வயதையுடைய ஆறுமுகம் சத்தியசீலன் என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிநாடு சென்று கடந்த மாதம் வருகை தந்திருந்தார்.
எனினும் அவர் வெளிநாடு சென்றுவந்து 10 தினங்களில் வீட்டில் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் அவர் மாரடைப்பில் உயிரிழந்ததாக குறித்த நபரின் மனைவியினால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக மரணமானவரின் சகோதரிகளின் கணவர்மார்களினால் பட்டிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
அவர் மாரடைப்பினால் உயிரிழக்கவில்லையெனவும் அவர் திட்டமிட்ட வகையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து குறித்த சடலத்தினை தோண்டியெடுத்து விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்க செய்ய வேண்டும்!
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 02:19.12 PM GMT ] [ நக்கீரன் ]
இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்க செய்ய வேண்டும் என அமெரிக்கா சென்றுள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி கேட்டுக் கொண்டார்.
அமெரிக்கா மக்களவை குழு அமைப்பு அழைப்பு விடுத்ததை ஏற்று அமெரிக்கா சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பைஜெயந்த் பாண்டா, சுப்ரியா சுலே, உதய்சிங், பிரதாப்சிங் பஜ்வா, பிரேம்தாஸ், பக்தசரண்தாஸ் உள்ளிட்ட எம்.பி குழுக்கள் அரசு முறை பயணமாக ஒரு வார காலம் அமெரிக்கா சென்றுள்ளனர்.
அதோடு, அங்குள்ள மக்களவை உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் பல்வேறு கருத்துக்கள் குறித்து கலந்தாய்வு செய்தனர்.
இதில், அமெரிக்கா நல்லுணர்வு மேம்படுவதற்கான பல்வேறு விஷயங்கள் குறித்து பரிமாறி கொள்ளப்பட்டது.
இந்த கலந்துரையாடலின் போது மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவிக்கையில்,
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் நலனுக்காக இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக பேசினார்.
இலங்கை தமிழர்களுக்கு இந்தியா மேற்கொண்டு வரும் அடிப்படை வளர்ச்சிக் கட்டமைப்பு பணிகள் குறித்தும் அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
அதோடு, இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பாக குடியமர்த்தவும், அவர்களுக்கு கல்வி, பொருளாதார சுதந்திரம் கிடைத்திடவும், அதிகார பகிர்வு அளிக்கவும் இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்கு அமெரிக்க அரசும் இணைந்து செயல்பட்டு, இந்த முயற்சி பலனளிக்க தேவையான மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இதை இந்திய அரசின் பிரச்சினை என்று கருதாமல், அமெரிக்கா அரசும் மனித நேயத்துடன் இப்பிரச்சினையை அணுக வேண்டுமென்று மாணிக்கம் தாகூர் எம்.பி கேட்டுக் கொண்டார்.
Geen opmerkingen:
Een reactie posten